மார்கழி மாத முக்கிய விரதங்கள்
மார்கழி மாதத்தில் வழிபாடு செய்வது முன்னோர்கள் காலத்திலிருந்து தொடர்ந்து கடைப்பிடித்து கொண்டு வருகின்றனர். மார்கழி மாதம் விரதமிருந்து விஷ்ணுவை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும். வாழ்வில் செல்வ செழிப்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் பெறுவதற்கும், தொழில் நஷ்டம் நீங்கப்பெற்று லாபத்தை பெறுவதற்கு, திருமணத்தடை நீங்கி திருமணம் கைகூடவும் மார்கழி மாத வழிபாடு உகந்தது.
- மார்கழி மாதம் விரதமிருந்து விஷ்ணுவை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.
- மார்கழி மாதத்தில் வைகுண்ட பதவி பெறும் வைகுண்ட ஏகாதசி வருகின்றது.
- திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய திருவாதிரை நோன்பு சிவ விரதமாக போற்றப்படுகின்றன.
வருடத்தில் முக்கிய வைகுண்ட ஏகாதசி
மார்கழி மாதத்தில் வைகுண்ட பதவி பெறும் வைகுண்ட ஏகாதசி வருகின்றது. இது வருடத்தில் முக்கிய ஏகாதசி என்பதால் வைகுண்ட ஏகாதசி வழிபட மறவாதீர்கள். மார்கழியில் வருகின்ற பாவை நோன்பு பெண்கள் இருக்கும் விரதங்களில் முக்கியமானது.
பாசுரங்களை பாடி மகிழ
திருமொழி, திருப்பாவை, ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ வேண்டும். திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய திருவாதிரை நோன்பு சிவ விரதமாக போற்றப்படுகின்றன. திருவாதிரை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, பௌர்ணமி அன்று கடைபிடிக்கப்படும்.
மாங்கல்ய பலம் பெற
இன்றைய தினம் திருவாதிரை களி செய்து சிவபெருமானுக்கு படைத்து வழிபடுவார்கள். மாங்கல்ய பலம் பெற நோன்பு இருக்கும் பெண்கள் அன்றைய தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாராயணம் செய்வர். திருவாதிரை நட்சத்திரம் அன்று புது மாங்கல்யச் சரடு மாற்றிக் கொள்வார்கள்.
மேலும் படிக்க : தெய்வீகம் பொங்கும் வெள்ளிக்கிழமை