வைகாசி விசாகம் விரதம் ஏன் அவசியம்..!!
வைகாசி விசாகம் ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற பௌர்ணமி விசேஷம். அது போலவே வைகாசியில் பௌர்ணமி ஒட்டி வரும் இந்த விசாக நட்சத்திரம் முருகனுக்குரிய நட்சத்திரம் என்பதால், இன்றைய தினம் விரதம் இருந்து முருகனை வழிபடுதல் சிறப்பு. முருகன் கோவில்களில் அன்னதானம் அபிஷேகத்திற்குரிய பொருட்களை உங்களலால் உங்கள் சக்திக்குரிய பொருட்களை வாங்கி கொடுப்பது கூடுதல் விசேஷமாகும்.
வைகாசி விசாகம்
ஜூன் நான்காம் தேதி வியாழக்கிழமை அன்று 04/06/2020 விசாக நட்சத்திரம் வருகின்றது. முருகனுக்குரிய விசாக நட்சத்திரமான இன்றைய தினம் முருகனை வழிபடுவதால், அந்த அறுபடை முருகனின் அருளைப் பெறுவதோடு, வாழ்வில் அனைத்து முன்னேற்றங்களும் வந்து சேரும். இன்றைய தினத்தில் சூரிய வழிபாடும் உகந்ததாகும். குழந்தை வரம் வேண்டியும், கணவன், மனைவி ஒற்றுமை வேண்டியும், இன்றைய நாளில் விரதம் இருக்கலாம்.
வைகாசி விசாகம் இன்று விரதம் இருப்பவர்கள், அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் எழுந்து குளித்து விட்டு தன் விரதத்தை தொடங்க வேண்டும். காலை ஒரு வேளை மட்டும் அன்னம், ஆகாரமின்றி விரதமிருந்து, மதியம் உணவை உண்ணலாம். அன்று மாலை விரதத்தை முடித்துக் கொண்டு, வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முருகனை வழிபடலாம்.
குழந்தை வரம்
இன்றைய சூழலில் நாம் கோவிலுக்கு செல்ல முடியாத காரணத்தால், நம் வீட்டிலேயே எளிமையாக பூஜை செய்ய முடியும். அன்று காலையும், மாலையும் முருகனுக்கு வீட்டிலேயே தீபமேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம். இதனால் முருகனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். குழந்தை வரம் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை மேம்படும்.
கணவன் மனைவி ஒற்றுமை
இந்த விரதத்தை காலையில் தொடங்கும் போது சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு தொடங்கவேண்டும். மாலை சூரிய அஸ்தமனத்தில் முடித்துக் கொள்ளலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள், ஒரு வேளை மட்டும் விரதத்தை மேற்கொள்ளலாம். முழுவதுமாக விரதமிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், நீர் ஆகாரங்கள், பழங்கள் மட்டும் உண்டு விரதம் இருந்து மாலை முடிந்தவுடன் உணவு ஆகாரங்களை சாப்பிடலாம்.