திருச்சி விவசாயிகள் உரிய விலை கிடைக்க பேரணியாக சென்று போராட்டம்
யார் செய்த பாவம் இது. கலியுக காலத்தில் இன்னும் நாம் என்னென்ன சந்திக்க போகின்றோம் என்று நினைக்கையில் நெஞ்சம் பதறுகிறது. மக்கள் படும் வேதனையை யார் தீர்ப்பார்கள் என்ற பெரிய கேள்விக்குறி உள்ளது.
இந்நிலையில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், சென்னையை நோக்கி தனிமனித இடைவெளியுடன், விவசாயிகள் பேரணியாக சென்று போராட்டம் நடத்துவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்து விட்ட போதிலும் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்காததை கண்டித்து விளைவித்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என குற்றச்சாட்டையும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் போது வெண்டைக்காய், எலுமிச்சம்பழம் உள்ளிட்டவற்றை தரையில் கொட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறும் போது ஏற்கனவே விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் இருந்து வரும் நிலையில் தற்போது விளைவித்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்க வில்லையே எனவே காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என குற்றம்சாட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விளைவித்த காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.