சுனில் கவாஸ்கருக்கு என்னதான் ஆச்சு!
அரபு நாடுகளில் நடந்து வரும் ஐபிஎல் டி20 தொடரில் நேற்று பெங்களூருக்கும் பஞ்சாபிற்கும் நடுவிலான போட்டி நடந்தது. 97 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை தழுவியது பஞ்சாப் அணி. இந்தத் தோல்விக்கு முக்கிய காரணமாக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியை சாடுகின்றனர்.
பஞ்சாப் அணியின் கேப்டனான கே எல் ராகுல் நேற்றைய ஆட்டத்தில் 132 ரன்கள் குவித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளார். 2020 ஐபிஎல் டி20 தொடரில் முதல் சதத்தை அடித்த நாயகர் இவர்தான். கே எல் ராகுல் 83 மற்றும் 89 ரன்கள் குவித்த போது அவுட்டாகி இருக்கக்கூடும். விராட் கோலியின் சரியான பீல்டிங் இல்லாததால் கேட்சை தவற விட்டார். அந்த மாபெரும் விக்கெட்டை தவிர விட்டதாலேயே பெங்களூர் அணி தோற்றதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
கே எல் ராகுல் விக்கெட் எடுக்காததால் பெங்களூர் அணிக்கு 206 என்ற மாபெரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்தக் தவறவிட்ட கேட்சிற்கு பிறகு பெங்களூர் அணியின் பந்துவீச்சாளரான ஸ்டெயின் மற்றும் ட்யூபே ஓவரில் தல 26 மற்றும் 23 ரன்களை கடைசி 2 ஓவர்களிலில் குவித்த கே எல் ராகுலின் மொத்த ஸ்கோர் 132 ஆக உயர அந்த ஸ்கோரை கூட பெங்களூரின் முழு அணி தாண்டவில்லை மேலும் 17 ஓவர்களில் ஆல் அவுட்டாகி ஆட்டத்தை இழந்தது பெங்களூர் அணி.
விராட் கோலி பில்டிங்கில் மட்டும் அணிக்கு கைவிடாமல் பேட்டிங்கிலும் கைவிட்டார். ஐந்து பால்களுக்கும் ஒரு ரன் மட்டுமே குவித்து அவுட்டாகினார் விராட் கோலி. அப்பொழுது கமெண்ட்ரி பாக்ஸில் இருந்த சுனில் கவாஸ்கர் நேரலையில் கூரிய கருத்து மிகவும் தவறானது என விராட் கோலியின் ரசிகர்கள் பொங்குகின்றனர்.
‘ஊரடங்கு காலத்தில் அனுஷ்காவின் பந்திற்கும் மட்டுமே ஆடி பழகிவிட்டார் விராட் கோலி’ என்ற சுனில் கவாஸ்கரின் கருத்து மிகவும் தவறானது இந்த வரிகள் இரு அர்த்தத்தைத் தந்து விளையாட்டு வீரரை அவமானப்படுத்துவதாகும். விளையாட்டின்போது அவரின் குடும்பத்தினரை பற்றி பேசுவது தவறாக உள்ளதாக ரசிகர்கள் ஆத்திரத்துடன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் விராட் கோலி தனது மனைவியுடன் கிரிக்கெட் விளையாடுவதை காணொளியாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதனைக் குறிப்பிட்டு சுனில் கவாஸ்கர் கூறியிருக்க கூடும் என சிலர் யோசித்தாலும் விளையாட்டு வீரரை பற்றி கருத்துக் கூறுவதில் தவறில்லை ஆனால் மனைவி சொந்த வாழ்க்கை குடும்பத்தினர் என யாரையும் சேர்த்து கருத்து கூறுவது தவறு என்பதால் சுனில் கவாஸ்கரை கமெண்டரியிலிருந்து விலக்க வேண்டும் என விராட் கோலியின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.