சினிமாசின்னத்திரை

பிரபல சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்!!!

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த பிரப நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி இன்று திடீரென உடல் நல குறைவால் காலமானார்.

அவரது திடீர் மரணம் சின்னத்திரை மற்றும் சினிமா துறையினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே எஸ்பிபி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் வடிவேல் பாலாஜியின் மரணம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.அது இது எது நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு போல நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து அதிகம் கவர்ந்து இருக்கிறார். அவரது காமெடிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். வடிவேலு போன்ற கெட்டப்பில் அவர் செய்யும் காமெடி மற்றும் ரியாக்‌ஷன்கள் நம்மை வயிறுக் குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் வடிவேல் பாலாஜி நடித்து இருக்கிறார்.

நடிகை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களிலும் வடிவேலு பாலாஜி நடித்துள்ளார் . அவர் நடிகர் வடிவேலுவை போன்று நடித்தாலும் மற்றும் அவரைப் போன்று பாடி லாங்குவேஜை கொண்டதாலும் இவர் வடிவேலு பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.

இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பே மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாரடைப்பு ஏற்பட்டதால் இவருடைய கை கால்கள் செயல் இருந்ததாக கூறப் படுகின்றது. அதனாலேயே சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.

தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதியில்லாததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வடிவேல் பாலாஜி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  
45 வயதான நடிகர் வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரின் திடீர் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *