ஆன்மிகம்ஆலோசனை

குடும்ப ஒற்றுமைக்கு குல தெய்வத்தையும், முன்னோர்களையும் வழிபடுங்க..!!

அமாவாசை நாட்களில் நாம் என்னென்ன செய்ய வேண்டும் ஒவ்வொரு மாதமும் வருகின்ற அம்மாவாசை அன்று நம் குல தெய்வத்தையும் முன்னோர்களையும் வழிபடலாம். அமாவாசை நாட்களில் பெண் தெய்வங்களை வணங்கலாம். துர்க்கை, அம்பிகை, காமாட்சி, மீனாட்சி, காளியம்மன், மாரியம்மன், தெய்வங்கள், அஷ்டலட்சுமிகள், சப்த கன்னிமார்கள், கருப்புசாமி போன்ற தெய்வங்களை வணங்குவது நல்லது.

காலை எழுந்தவுடன் குளித்து விட்டு சமைத்த பிறகு காகத்திற்கு சாதம் மட்டும் வைக்கலாம். முடிந்தால் மாட்டிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் வாங்கிக் கொடுங்கள். இதைத் தொடர்ந்து அமாவாசை நாட்களில் செய்து வருவதால், நாம் செய்த பாவங்கள் குறையும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். குடும்ப வறுமை நீங்கும். கஷ்டங்கள் குறையும். உங்களால் முடிந்தவரை உங்கள் வசதிக்கு ஏற்ப பிறருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

நேர்மறை எண்ணங்கள் தோன்ற

கோவிலுக்கு அரிசி வாங்கி தானம் செய்யலாம். வீட்டில் இருக்கும் சாமி படங்களை சுத்தம் செய்து ,விளக்கேற்றி மணமுள்ள பூக்களை சாற்றி, பிரசாதம் படைத்து சர்க்கரை பொங்கல், பழங்கள், கல்கண்டு, பேரிச்சம்பழம் உங்களால் என்ன முடியுமோ? அதை படைத்து வழிபடுங்கள். உங்களுக்குத் தெரிந்த மந்திரம் ஸ்லோகங்களை நீங்களே உச்சரியுங்கள். இதனால் உங்களுக்குள் நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.

வீட்டில் இருப்பவர்களுக்கும் இந்த நேர்மறை எண்ணங்கள் உருவாவதால், உங்களை சுற்றி நல்ல வைப்ரேஷன் கிடைக்கும். வீட்டில் தீய சக்திகள் அண்டாது, வீட்டில் பூஜையை முடித்துவிட்டு காலை அல்லது மாலை உங்களுக்கு எப்ப நேரம் கிடைக்கிறதோ, அப்போது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கோவிலுக்கு சென்று, விளக்கேற்றி வழிபடுங்கள். ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும் செய்து வருவதால் குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

திருஷ்டி குறைய

குழந்தையின்மை, வேலையின்மை, திருமணத்தடை, வறுமை நீங்கி, குடும்பம் சுபிட்சம் பெறும். குடும்பத்தில் உள்ள பெண்கள் தினமும் காலை எழுந்தவுடன் குளித்து விட்டு சமைக்க வேண்டும். பொட்டு வைத்து லட்சணமாக இருக்க வேண்டும். கைகளிலும், கழுத்திலும், அணிகலன்கள் அணிந்திருக்க வேண்டும். வகிட்டில் எப்பொழுதும் குங்குமம் வைத்திருக்கவேண்டும். கைகளில் கண்ணாடி வளையல் அணிவதால் திருஷ்டி குறையும். இதையெல்லாம் திருமணமான பெண்கள் தொடர்ந்து செய்து வருவதால் குடும்பத்தில் நிகழும் மாற்றங்களை நீங்களே உணரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *