போலி இணையதளம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்
போலி இணையதளத்தின் மூலம் திருப்பதி திருமலை தேவஸ்தானம் பிரசாதம் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளன. இது போலியான இணையதளம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தற்போது இதை உடனடியாக முடக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலை தேவஸ்தானம்
- சுவாமி தரிசனம் செய்பவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இந்த லட்டு தயாரிக்கப்படும்.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் வீட்டுக்கு அனுப்பப்படுவதாக கூறி விளம்பரம்.
- போலி இணையதளத்தின் மூலம் பிரசாதம் விநியோகம். இது போலி இணையதளம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்பவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இந்த லட்டு தயாரிக்கப்படுகிறது.
முடக்கப்பட்ட இணையதளம்
Https://balajiprasadam.com/ என்ற முகவரியில் இயங்கி வந்த இணையதளம். முடக்கப்பட்ட இதில் உள்ள தகவல் தவறான செய்தி என்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளன. மேலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் வீட்டுக்கு அனுப்பப்படுவதாக கூறி விளம்பரப்படுத்திய போலி இணையதளம் இது.
இந்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பணத்தை ஆன்லைனில் செலுத்தினால் லட்டு வீட்டு முகவரிக்கு நேரில் வருமென்று விளம்பரம் செய்யப்பட்டதையும் தேவஸ்தானம் கவனத்தில் கொண்டு வந்துள்ளன.