செய்திகள்

பேஸ்புக்கின் புதிய ஆஃபர் அட்ராசக்க

அட்ரசக்க அட்ரசக்க இது செம என அடுத்த ஆண்டு 2021 ஜூலை வரை ஒரு வீட்டில் இர்ந்து வேலை செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு அறிவிப்பு கொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புகள் உலகத்தை ஆட்டுவித்த வருகின்றர். இந்த நேரத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம்வரை தனது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் உலகம் முழுவதும் வைரஸ் தொற்று பலரை வாட்டி வதைக்கின்றது. பணியாளர்கள் மிக கடினமான சூழ்நிலையில் இருக்கின்றன. வேலைவாய்ப்பு தினமும் செய்து கொண்டு வருபவர்களுக்குப் பயத்துடனே வேலை செய்ய வேண்டியதாக இருக்கின்றது.

நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்பவரை அலுவலகத்திற்கு வர வைக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்க, பேஸ்புக் நிறுவனமே யோசித்தது போதும் படிக்க வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு அடுத்த வருடம்வரை காலவரையின்றி வேலை செய்யக் கேட்டுக் கொண்டிருக்கின்றது.

கூகுள் நிறுவனமும் இதையே முன்னமே பின்பற்றி இருக்கின்றது இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனமும் இதனை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். வீட்டிலிருந்து வேலை செய்யும் தங்களது பணியாளர்களுக்கு 1000 டாலர் வீதம் நிதியுதவி கொடுக்கின்றது.

பேஸ்புக் நிறுவனத்தின் இந்தச் செயல்பாடு அரசு அறிவுறுத்தலின்படி விதிமுறை உடன் நடைபெறுகின்றது. இது சிறப்பான ஒரு செய்தியாகப் பேஸ்புக் ஊழியர்கள் கருதுகின்றனர். அடுத்த ஆண்டுவரை ஜாலியா வீட்டில் வேலை செய்யலாம். குழந்தைகளுடன் அளவளாவிக் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு வேலை செய்யும் சுகம் அது ஒரு தனி அளாதீங்க என்கின்றனர்.

பேஸ்புக் ஊழியர்களைப் பார்த்து அடடா “அவன் கொடுத்து வச்சவன் ஃபேஸ்புக் கூகுள் இந்த மாதிரி பெரிய கம்பெனில வேலை செய்கிறான், ஆனால் நாம் அப்படி இல்லையே” என்று அடுத்த அறிவிக்கையை நோக்கிக் காத்துக் கிடக்கின்றனர். மற்ற நிறுவன பணியாளர்கள் பார்ப்போம் மாற்றம் ஒன்றே மாறாதது இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு அணை உடைந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் நேரம் வரும் என்று நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *