எளிதான ஆலோவீரா பேஸ்பேக்கை வீட்டிலே செய்யுங்க…!
பண்டிகை காலங்கள் நெருங்கி கொண்டிருக்கின்றன. வீட்டில் அதிகமான வேலைப் பளு இருக்கும். உங்களுக்குள்ள பொருப்புகளில் பார்லர் போகப் போதிய நேரம் கிடைக்காது. ஆனால் உங்களை நீங்களே மெருகேற்ற வேண்டும். வீட்டிலே ஆலோவீரா ஜெல்லை வைத்து பேஸ் பேக் செய்வோம் வாங்க.
முகத்தின் அழகு முகத்திலே தெரியும்: அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆனால் நம்முடைய பேஸ் பேக் கலவையை பயன்படுத்து முகத்தின் அழகை முகத்திலே தெரிய வைக்கலாம். ஆலோவீரா ஜெல்லினை கொண்டு நமக்கான பேஸ் பேக் செய்து புற அழகை பராமரிப்போம்.
தேவையான பொருட்கள்:
ஆலோவீரா ஜெல்கான் பிளவர் வைட்டமின் இ மாத்திரைகள் எலுமிச்சை சாறு
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் அனைவரிடமும் இருக்கும். ஆலோவீரா ஜெல்லை அடிப்படையாக கொண்டு செய்யும் இந்த பேஸ் பேக் சருமத்தை பொழிவடையச் செய்து, புறத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றமும் பெற்று ஜொலிக்கலாம்.
கான்பிளவர் சுருக்கத்தை போக்கி தோலினை மெருக்கேற்றி இளமை பொங்கச் செய்யும். ஆலோவீரா ஜெல் புறத்தில் உள்ள நிறமங்கினை போக்கும். எலுமிச்சை சருமத்தை ஆரோக்கியமாக ஒளிரச் செய்யும். அத்துடன் வைட்டமின் இ ஆயில் நீண்ட கால பொலிவை கொடுத்து புற அழகினை பெருக்கூட்டி மாசிலிருந்து காக்கும்.
பயன்படுத்தும் முறை:
ஆலோவீரா ஜெல்லினை ஒரு ஸ்பூண் மற்றும் கான்பிளவர் ஒரு ஸ்பூண், எலுமிச்சை சாறு அரை மூடி, வைட்டமின் டேபிலட்கள் இரண்டு இவற்றினை ஒன்றாக கலந்து முகத்திலிட்டு 20 நிமிடம் ஊறவைத்து பின்பு காட்டன் பஞ்சினால் நீரில் துடைத்து எடுக்கவும். பின் காட்டனை ரோஸ்வாட்டரில் நனைத்து முகத்தில் தடவவும். பேஸ்பேக்கினை நீக்கிய பிறகு பேஸ் வாஸ் பயனபடுத்த வேண்டாம். குளிர்நீரில் முகத்தை கழுவினால் போதுமானது ஆகும்.
மேலே குறிப்பிட்ட பேஸ்பேக்கை விட்டிலே பயன்படுத்து இயற்கை அழகை மெருக்கேற்றி புத்துணர்ச்சி பெறுங்கள். இந்த குறிப்பிட்ட பேக்கை ஆண்கள் பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம்.