செய்திகள்தமிழகம்

நாமக்கல் மக்களின் புரட்சியால் வேற லெவல் செல்லும் தமிழ்நாடு

பரபரப்பாக பேசப்படும் துணி முகமூடிகள்…

இதுல என்ன விசேஷம்னு பார்த்தீங்கன்னா நம்ம முகமூடி போட்டு இருக்கோமா இல்லையான்னு காவல்துறையை கன்பியூஸ் பண்றதுக்காக இதை யோசிச்சி இருக்காங்க போல நம்ம நாமக்கல் மக்கள்…

டி-ஷர்ட் பிரிண்டிங், மக் பிரிண்டிங், உட் பிரிண்டிங், கீ செயின் பிரிண்டிங் போன்ற வேலைகளை செய்யும் படம் பிடிப்பு கடைகள் தன் வியாபாரத்தை தலைதூக்கும் பொருட்டு ஒரு புரட்சியான செயல் பிரிண்டட் மாஸ்க்…

உலகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் முகமூடி என்பது அத்தியாவசியமாக மாறிவிட்டது. ஹேண்ட் வாஷ், ஸானிடைசர், மாஸ்க் போன்றவற்றிற்கு மார்க்கெட் விலையை தூக்கிவிட்டு பின் பற்றாக்குறையையும் சந்திக்க வைத்தது கொரோனா.

அதுவும் இந்த முகமூடி செய்யும் பாடே தனி பாடு…

ஆடை நிறத்திற்கு தகுந்தார்போல் முகமூடி அணியும் பெண்களை கேலி செய்ததோடு ஆண்களையும் தற்போது விட்டுவிடவில்லை. ஒருவரின் மூக்கு பகுதியிலிருந்து தாடைப் பகுதி வரை மறைக்கும் முகமூடியை அழகாக டிசைன் செய்துள்ளனர் புகைப்பட தொழில்சார் நாமக்கல் மக்கள்.

20 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்கும் சாதாரண துணி முகமூடி இந்த டிசைன் செய்யும் கருவியினுள் சென்று வந்தால் அதன் மதிப்பு ஐந்து மடங்காக உயர்கிறது. துணியில் மீசை உதடு தாடை பகுதியின் புகைப்படத்தை தட்டச்சு செய்து முகமூடியாக உற்பத்திக்கின்றனர் நாமக்கல் மக்கள். ஒரு பிரிண்டட் மாஸ்க் 150 ரூபாய் என விற்கப்படுகிறது. இதனை அணிவதால் ஒருவர் முகமூடி அணிந்து இருக்கிறார்களா? இல்லையா! என்னும் சந்தேகம் பார்க்கும் காவலர்களுக்கு வர அவர்களை பிடித்து  ஏமாற்றம் அடையும் காவல்துறையை கண்டால் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.

சாதாரண துணி முகமூடியிலேயே பல வகைகளும் பலன்களும் வண்ணங்களும் வந்து குறைந்த விலையில் கிடைக்கும் பொழுது இந்த விலை உயர்ந்த முகமூடியை வாங்குவார்களா!!!

பார்க்க அழகாகவும் ஆசையாகும் இருப்பதால் வாங்கும் மக்களும் உண்டு மற்றும் பெரும்பாலும் இளம் வயதுக்காரர்கள் காவல்துறையிடம் விளையாடுவதற்காக வாங்கலாம் என யூகிக்கப்படுகிறது ஆனால் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *