பார்வை தெளிவடைய கண்களுக்கு பயிற்சி கொடுங்க
சரியாக கண்களை மூடி விழிக்காத போது கண்கள் வறட்சி அடைவது, வீக்கம் மற்றும் பார்வை திறன் குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது கண்களில் ரத்த ஓட்டத்தை சீராக்கி கண்களில் இருக்கும்.
அழுக்கை வெளியேற்ற அதிகப்படியான வெளிச்சம் கண்களை தாக்குவதை தடுக்க அடிக்கடி கண்களை நன்றாக திறந்து திறந்து மூட வேண்டும். கண்களை மூடி விழிக்கும்போது அதிக சிரமம் கொடுக்க கூடாது. தினமும் குறைந்தது 30 நொடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இவற்றை செய்யலாம்.
அதிக நேரம் கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் டிவி பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கண்களில் பல பிரச்சனைகள் வரும். சில எளிய பயிற்சிகள் மூலம் கண்பார்வையை மேம்படுத்த முடியும். முதலில் கண்களை வலப்புறமாக கொண்டு செல்லவும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொண்டு சென்றால் போதுமானது. அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது.
அப்படியே வலது புறத்திலிருந்து இடது புறமாக கொண்டு செல்ல வேண்டும். இந்த பயிற்சியை எந்த காரணம் கொண்டும் வேகமாக செய்யக்கூடாது. பயிற்சி முடிந்ததும் சில நொடிகள் கண்களை மூடி இருக்க வேண்டும். கண்களை நேராக ஒரே இடத்தை பார்த்துக் கொண்டு தலையை வலது இடது புறமாக திருப்பவும்.
அதேபோல் மேலிருந்து கீழ், கீழிருந்து மேலாக கொண்டு செல்ல வேண்டும். கண்கள் ஒரே இடத்தை பார்க்க வேண்டும். இது கண்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. குறைந்தது ஒரு நிமிடமாவது இவற்றை செய்யலாம். இப்படி ஒரு நாளில் பத்து முறை செய்ய வயதான காலத்திலும் கண்பார்வை மங்காது.
கண்களுக்கு ஓய்வு கொடுத்தல் மிகவும் அவசியம். கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் இருந்தால் தான் ஓய்வு கொடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அதிக நேரம் வெயிலில் சென்றால் செல்போன், டிவி முன்பு இருந்த ஒரே இடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாலோ அடுத்து ஓய்வு என்பது மிகவும் அவசியம்.
எனவே சிறிது நேரம் கண்களை மூடி மனதில் பிடித்ததை சிந்தித்து கொண்டிருக்கலாம். கருவிழிகளை வலது இடது புறமாக 5 நொடிகள் கொண்டு செல்லலாம். பிறகு மேலும் கீழுமாக 5 நொடிகள் அண்டிக் கிளாக் மற்றும் பிளாக் வயசில் கருவிழிகளை சுற்று பார்க்க வேண்டும்.