எக்ஸ்ட்ரா 8 ரயில்கள் இயக்கம். தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதிதாக 8 ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மன்னார்குடி, பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு சென்னை சென்ட்ரல் , எழும்பூர் போன்ற இடங்களில் 8 ரயில்கள் இயக்கப்படும்.
செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து கொரோனா காரணமாக தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் இயங்க பட்டு வருகின்றன.
- புதிதாக 8 ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- டிசம்பர் 10 முதல் வாரத்திற்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
- சென்னையில் மட்டுமே 15 வகை ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தன.
ரயில்கள் இயக்கம்
தென் மாவட்டங்களான சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை, மதுரை வரையிலும், அண்டை மாநிலங்களான பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
சென்னையில் மட்டுமே 15 வகை ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது தெற்கு ரயில்வே மீண்டும் 8 சிறப்பு ரயில்கள் தினசரி இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இது பயணிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளன. சென்னை- எழும்பூர், மன்னார்குடி, ராமேஸ்வரம், குருவாயூர் ஆகிய இடங்களுக்கு மற்றும் சென்னை சென்ற பாலக்காடு, மங்களூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கும் நாள் தோறும் இந்த ரயில்கள் டிசம்பர் 8ஆம் தேதி முதல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வாரத்திற்கான சிறப்பு ரயில்கள்
கோவை -நாகர்கோயில் இடையிலும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. எழும்பூர் – நாகர்கோவில் டிசம்பர் 10 முதல் வாரத்திற்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.