தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் அனுமதி இல்லை…?
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 13,990 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் மட்டும் 6190 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்குகள் கட்டுப்பாடுகளை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் மிக அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, பிற காரணங்களுக்காக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 14 முதல் 18 வரை வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 300 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி, அதிகபட்சம் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே போட்டியை காண அனுமதி, மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு 75% இருக்கை அனுமதியுடன் பொது பேருந்துகள் இயக்கப்படும் என்றும், ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாக்களை விட மக்கள் உயிர் முக்கியம் என்று இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய நிலையில், காணும் பொங்கலான ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.