சமையல் குறிப்புமருத்துவம்வாழ்க்கை முறை

அசத்தலான சட்னி வகைகள்..!! உங்க வீட்டு சுட்டீஸ்காக..!!

குழந்தைகளுக்கு தினமும் பிடித்த உணவுகளை செய்து கொடுப்பது மட்டுமில்ல, அவங்க அத சாப்பிடணும். அதுவும் ஆரோக்கியமா இருக்க இதெல்லாம் செஞ்சு குடுங்க விரும்பி சாப்பிடுவாங்க. பீட்ரூட் சட்னி, பிரண்டை துவையல், முள்ளங்கி சட்னி இதெல்லாம் செஞ்சு கொடுக்குறதால உங்க பிள்ளைகள் என்னென்ன போட்ருக்குனு ஆராய்ச்சி பண்ண மாட்டாங்க. டேஸ்ட் இருக்க நால, மொறு மொறு தோசைக்கு இத தொட்டுக்க சுவையாவும் இருக்கும்.

முள்ளங்கி சட்னி : நீர் சத்து மற்றும் சிறுநீர் தொல்லை போக்கும்

முள்ளங்கி ஒன்று தோல் சீவி கட் செய்து கொதித்த நீரில் இந்து நிமிடம் இந்த காயை போட்டு வைத்து எடுப்பதால் இதன் நாற்றம் போய்விடும். சாப்பிடும் போது முள்ளங்கி வாசம் இருக்காது. இப்போது, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு ஒரு ஸ்பூன், கடுகு, சிறிய வெங்காயம் 6 பல் , தக்காளி 2 நறுக்கியது, பூண்டு இரண்டு, வர மிளகாய் காரத்திற்கு ஏற்ப, தண்ணீரில் போட்டு எடுத்த நறுக்கிய முள்ளங்கி, உப்பு ஒவ்வென்றாக சேர்த்து நன்றாக வதக்கி விட்டு அரைத்து எடுக்கவும். விரும்பினால் கடுகு, கருவேப்பிலை தாளித்து போடவும்.

பீட்ரூட் சட்னி : ரத்தம் உற்பத்தியாகும்

ஒரு பெரிய பீட்ரூட் தோல் சீவி துருவி கொள்ளவும். ஆயில், வரமல்லி ஒரு ஸ்பூன், கடலை பருப்பு ஒரு ஸ்பூன், உளுந்து ஒரு ஸ்பூன், சிறிய வெங்காயம் ஐந்து கட் செய்தது, பூண்டு இரண்டு பல், வர மிளகாய் தேவைக்கேற்ப, புளி சிறிது, தேங்காய் துருவல் அரை மூடி, ஒரு கடாயில் ஆயில் விட்டு இதில் வரமல்லி முதல் ஒவ்வரு பொருளாக அடுத்தடுத்து ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனை போக வதக்கி ஆற வைத்து மிக்ஸில் அரைக்க பீட்ரூட் சட்னி ரெடி.

பிரண்டை சட்னி

பிரண்டை கை கால் மூட்டு எலும்புகளுக்கு பலம் சேர்க்கும்.

பிஞ்சான பிரண்டை ஒரு கட்டு வாங்கி வந்து, முதல் நாளே கழுவி துடைத்து ஈரம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். இதை நறுக்கும் போது இரண்டு கைகளுக்கும், நல்லெண்ணெய் தடவி கொண்டு நறுக்கவும். இல்லை யென்றால் கை அரிப்பு எடுக்கும். சுத்தம் செய்ய அதில் மேல், பின், நான்கு சைடு கனமான நார் தோல் நீக்கி ஒன்று இரண்டாக உடைத்தால் நார் வரும் அதை நீக்கி விடவும்.

சுத்தம் செய்து கட் செய்த பிரண்டையை ஒரு வாணலியில் ஆயில் விட்டு நன்கு மொருகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும். அதே வாணலியில் மேலும் ஆயில் விட்டு கடலை பருப்பு, உளுந்து, சிறிய வெங்காயம் வதக்கி கொள்ளவும். தக்காளி இரண்டு கட் செய்து வதக்கவும். தேங்காய் துருவல் அரை மூடி, வர மிளகாய் காரத்திற்கேற்ப சேர்த்து வதக்கவும். இதனுடன் புளி, உப்பு சேர்த்து தாளித்து ஆறவிட்டு அரைத்து எடுத்தால் பிரண்டை சட்னி ரெடி. நல்லெண்ணெயில் கடுகு, சிறிது பெருங்காயதூள் சேர்த்து,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.

மேலும் படிக்க

இருமலில் பலவகை இருந்தாலும், அத்தனை இருமலுக்கு ஒரே தீர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *