நீண்ட நேரம் கணிணியில் பணிபுரிபவரா உங்களுக்காக
நீண்ட நேரம் கணிணியில் பணிபுரிபவரா உங்களுக்கான பயிற்சி கழுத்து, முதுகு மற்றும் கீழ் இடுப்புப் பகுதியில் வலி ஏற்படும். உடல் கழுத்து வளைந்து விடும்.
ஒரு நிமிடம் சில பயிற்சிகளை செய்தால் வலி நீங்கி உடல் அமைப்பு வலுவாக இருக்கும். உடல் எடையை குறைக்க மட்டும் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. அதிக நேரம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் ஜாலியாக படுத்துக்கொண்டு டிவி பார்ப்பவர்கள், என பலரும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உடலுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் இருப்பவர்கள்.
நேராக படுத்து முழங்காலை மடக்கி 6 இன்ச் அளவிற்கு உயர்த்த வேண்டும் கைகளை தலைக்கு பின்புறம் கோட்டு தோலை சற்று உயர்த்திப் பிடிக்க வேண்டும். வலது கையால் இடது முழங்காலை தொட வேண்டும். மீண்டும் பழைய நிலையை அடைந்து பிறகு அதேபோல், இடது முழங்கால் வலது முழங்கையை தொடவேண்டும்.
முழங்கால்படியிட்டு கைகளை தரையில் ஊன்றவும். நேராக இருக்க வேண்டும். தலையை உயர்த்தி நடு உடல் பகுதியை கீழாக கொண்டு செல்லுங்கள். இதே நிலையில் 30 நொடிகள் இருக்க வேண்டும். உடலின் நடுப் பகுதியை மேல் நோக்கி உயர்த்தி தலையை கீழே கொண்டு சென்று அதே நிலையில் மீண்டும் 30 நொடிகள் இருக்கவும்.
முழங்கால் படியிட்டு கைகளை தரையில் ஊன்றி வலது கை மற்றும் இடது முழங்காலை ஊன்றி இடது கை மற்றும் வலது காலை நீட்ட வேண்டும் இதே போல் ஒரு நிமிடம் இரண்டு பக்கமும் மாறி மாறி செய்து வரலாம்
நீண்ட நேரம் கணினியில் வேலை செய்வதால் ஏற்படும் பேக் பெயின் தீர சில பயிற்சிகள்