7 இடங்களில் அகழாய்வு.. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
கீழடி, சிவகளை, கங்கைகொண்டசோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை உள்ளிட்ட 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் நிலமானது மிகத்தொன்மை வாய்ந்தது. தமிழின்
தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும்.
அண்மைக்காலமாக, கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது என்றால் அது மிகையாகாது. கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வுகளுக்கு முன்னோடி அகழாய்வாகத் திகழ்கிறது.
இதுவரை கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த “நகரமயமாக்கம்”” தமிழ்நாட்டில் இல்லையென்றும்,
பிராமி எழுத்து மெளரியர் தோற்றுவித்தது என்றும் கருதுகோள்கள் இருந்தன. அத்தகைய கருதுகோள்களுக்கு அறிவியல் பூர்வமாக விடையளித்துள்ளது கீழடி அகழாய்வு. மேலும் தமிழரின் வேர்களைத் தேடிச் செல்வோம்..! உலகுக்கு அறிவிப்போம்.! என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.