டிஎன்பிஎஸ்சி

மொழிப்பாட ஹைலைட்ஸ் பகுதி 7!

ஆகுபெயர்:ஆகுபெயர் 6 வகைப்படும்ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு  தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகு பெயராகும்.
முதலாகுபெயர்:மல்லிகை சூடினாள்மல்லிகை என்பது முதற்பொருளாகிய கொடியைக் குறிக்காமல் பூ என்னும் சினையைக்குறிக்கிறது.
இடவாகுபெயர்:பேச்சுப்போட்டியில் பூண்டி பள்ளிக்கு  முதலிடம். பள்ளி என்னும் இடப்பெயர் அப்பள்ளியில் பயிலும் மாணவிக்கு ஆகி வருவது   – இந்தியா தங்கம் வென்றது   – ஊர் உறங்கியது   -உடைந்து ஏரியைப் பார்க்க ஊரே திரண்டு வந்தது
காலவாகுபெயர்:நீலா டிசம்பர் சூடி வந்தாள்.டிசம்பர் என்னும் காலப்பெயர் மலருக்கு ஆகி வருவது

டிசம்பர் என்னும் காலப்பெயர் மலருக்கு ஆகி வருவது  -சித்திரையான் – கார்த்திகை வந்தாள்
சினையாகுப் பெயர்:வெற்றிலை நட்டான்வெற்றிலை என்னும் உறுப்பு (சினை) இலையைக் குறிக்காமல் கொடிக்கு ஆகி வருவது ஆகும்.
குணவாகுப்பெயர் அல்லது பண்பாகுபெயர்:வீட்டிற்கு வெள்ளை அடிவெள்ளை என்னும் பண்புப்பெயர் தன்னைக் குறிக்காமல் சுண்ணாம்பைக் குறிக்கிறது.            -நீலம் சூடினாள்
தொழிலாகுப்பெயர்:பொங்கல் உண்டோம்பொங்கல் என்பது பொங்குதலாகிய தொழிலைக் குறிக்காமல் உணவைக் குறிக்கிறது.
எண்ணல் அளவையாகுப்பெயர்: ஒன்று பெற்றால் ஒளிமயம்ஓன்று என்னும் எண் தன்னைக் குறிக்காமல் குழந்தைகளுக்கு ஆகி வருவகிறது
எடுத்தல் அளவையாகுப் பெயர்:ஐந்து கிலோ என்ன விலை?கிலோ என்னும் எடுத்தல் அளவை ஏதோ ஒரு பொருளுக்கு  பரப்பு, சர்க்கரை,
முகத்தல்  அளவையாகுப்பெயர்:மூன்று லிட்டர் கொடு, அரை லிட்டர் எவ்வளவு?லிட்டர் என்னும் முகத்தல் அளவை பாலுக்கோ எண்ணெய்க்கோ அல்லது ஏதேனும் பொருளுக்கு ஆகி வருவது 
நீட்டல் அளவையாகுப்பெயர்:உடுப்பது நான்கு முழம், நான்கு மீட்டர்  கொடு மீட்டர், முழம்  என்ற நீட்டல் அளவைகள் தன்னைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புய துணிக்கி ஆகிவருகிறது.
சொல்லாகுப்பெயர்:வள்ளுவன் சொல் வாழ்க்கைக்கு இனிதுதம்பி என் சொல் கேட்பான்
கருவியாகுப்பெய்ர:யாழ் கேட்டு மகிழ்ந்தான் குழல் கேட்டு மகிழ்ந்தான்பறையைக் கேட்டு ஆடினான்
யாழ், குழல், பறை போன்ற கருவிகள் தன்னைக் குறிக்காமல் தன்னால்எழும் இசைக்கு ஆகிவருகிறது
காரியவாகுப்பெயர்:அவர் கம்பலைக் கற்றவர்அவன் வள்ளுவனைப் படித்தவன்வள்ளுவனைப் படி
கம்பன் வள்ளுவன்  என்னும் கருத்தாவின் பெயர்கள் அவர்கள் இயற்றிய நூலுக்கு ஆகிவருகிறது.
உவமையாகுப் பெயர்:நாரதர் வருகிறார்பாவை ஆடினள்நாரதர்  என்பது கலகமூட்டுபவரையும் பாவை என்பது பெண்ணுக்கும் உவமையாகி வருவதால் உவமையாகு பெயராகும்.
தானியாகுபெயர்:பாலை இறக்குபாலை ஏற்று
பால் என்னும் பொருள் இடத்திற்கு ஆகிவருவது தானியாகு பெயர் ஆகும்.
 இடம் பொருளுக்கு ஆகி வருவது = இடவாகுப் பெயர்பொருள் இடத்திற்கு ஆகிவருவது=  தானியாகு பெயர்

புணர்ச்சி:

இரண்டு அல்லது பல சொற்கள் இணைவது புணர்ச்சி ஆகும்.
இயல்புணர்ச்சி:நிலைமொழியும், வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இயல்பாகப் புணர்வதை இயல்பு  புணர்ச்சி என்பர்.
எ.கா:வாழை + மரம்= வாழைமரம்பொன்+ வளையல= பொன்வளையல்மலர்+மாலை= மலர்மாலைபனை+ மரம் = பனைமரம்
முதல்மொழி- நிலைமொழி: நிலைமொழியின் இறுதி எழுத்து மெயெழுத்தாக இருந்தால் மெய்யீறு என்று கூற வேண்டும். உயிர்மெய்யாக இருந்தால் உயிரீறு என்று சொல்ல வேண்டும். 
வருமொழியின் முதலெழுத்து   உயிர்மெய்யாக இருத்தல் மெய்முதல் என்றும்,உயிராக இருந்தால் உயிர்முதல் என்றும் கூற வேண்டு. பொன்+ வளையல்= ன் மெய்யீறுபனை+ மரம்=  ன்+ஐ- உயிர் ஈறுபொன்+ வளையல் = மெய் மதல் கண் + அழகு = அ- உயிர்முதல் 
நிலைமொழியும், வருமொழியும் சேரும்போது மாற்றங்கள் ஏற்படுமானால் அது விகாரப்புணர்ச்சி என்பர்
விகாரப்புணர்ச்சி மூன்று வகைப்படும்: தோன்றல்- பலா+களை= பலாச்சுளைகெடுதல்- மரம்+வேர்= மரவேர்திரிதல்- பொன்+ சிலை+ பொற்சிலை
உயிரீற்றுப் புணர்ச்சி:
உயிரீற்றுப் புணர்ச்சி:உயிரீற்றுச் சொல்முன் வல்லின் எழுத்துக்கள் வந்தால் அதன் மெயெழுத்துமிகும்எ.கா:பலா+ சுளை= பலாச்சுளைபனி+போர்= பனிப்போர்தினை+துணை= தினைத்துணை
உடம்படுபெய்ப் புணர்ச்சி:நிலைமொழியின் உயிரீறும், வருமொழியின் உயிர்முதலும் சேரும்பொழுது ‘வ்’ அல்லது ‘ய்’ எழுத்துக்கள் இடையில் தோன்றும் ‘ய்’ மற்றும் ‘வ்’  போன்றவை  உடும்படுமெய்கள் ஆகும். இ,ஈ,ஐ ஆகியன முன் உயிர் வரின் ‘ய்’ தோன்றும்
கிளி+ அலகு= கிளி+ய்+அலகு= கிளியலகுதீ+ய்+எரிகிறது= தீயெரிகிறதுபனை+ஓலை= பனை+ய்+ஓலை= பனையோலை
அ,ஆ, உ, ஊ, ஓ முன் உயிர்வரின் ‘வ்’ தோன்றும்குண+ அழகி= குண+வ்+ஆழகி+ குணவழகிதிரு+ ஆரூர்+ திரு+வ்+ அழகி = பூவழகிகோ+இல்+ கோ+வ்+இல்= கோவில்
‘ஏ’ முன் உயிர்வடின்  வ்,ய் இரண்டு வரும்.தோ+ ஆரம்= தே+வ்+ஆம் = தேவாரம் அவனே+அரசன்= அவனேயரசன்
போட்டி தேர்வுக்கு மொழிப்பாடத்தின் அறிவு என்பது பறந்துப்பட இருக்க வேண்டும். அதனை அடுத்தடுத்து படித்து பயிற்சி செய்து தேர்வு மூலம் பரிசோதித்து எழுதும் பொழுது பயன்படுத்தி எழுதும் போது மொழிச்சுவை தெரியவரும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *