குரூப் 2 தேர்வுக்கான தமிழ் பதிவுகள் படிக்க!
குரூப் 2 தேர்வில் வெற்றி பெற மொழிப் பாடல்களில் பாடங்களில் படித்து கொண்டிருக்கும் தேர்வர்களுக்கான தொகுப்புகளை இங்கு கொடுத்திருக்கிறோம். படியுங்கள் மகளிர் சிறப்புகள் குறித்து மொழிப்பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாட குறிப்புகளை கொடுத்திருக்கிறோம்.
அன்னி பெசண்ட் அமையார்காலம் 1847-1933லண்டனில் வாழ்ந்த ஐரிஷ் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் அன்னி உட் திருமணத்திற்குப் பின் திருமதி அன்னி பெசண்டு என்று அழைக்கப்பட்டார்.
1893 இல் பிரம்மஞான சபை பணிக்காக இந்தியா வந்தார்.
17.09.1875 இல் எச்.பிளாவட்சி என்ற ரஷ்ய அம்மையாரும் கர்னல் எச்.எல். ஆல்காட் என்ற அமெரிக்கரும் சேர்ந்து அமெரிக்காவில் நியூயார்க் நகரில் துவக்கிய அமைப்பே பிரம்மஞான சபை ஆகும்.
இருவரும் இந்தியா வந்து சபையின் நோக்கத்தை நிறைவேற்றினர்.
பிரம்மஞான சபையின் நோக்கங்கள்
1.உலக சகோதரத்துவத்தை மையமாகக் கொண்டு செயல்படலாம்.
2. உலக சமயங்கள் தத்துவங்கள், அறிவியல்களை ஒப்பிட்டு ஆய்வது. மனிதரிடையே மறைந்து கிடக்கும் இயற்கை கணடறிதல் போன்ற நோக்கத்தை குறிக்கோளாக கொண்டிருந்தனர்.
சென்னை அடையாரில் பிரம்மஞான சபையின் தலைமை பீடத்தை அமைந்தனர்.ஆல்காட் 1907 இல் இறந்தப்பின் 1907 இல் அன்னிபெசண்ட் அம்மையார் அதன் தலைவரானார்.
1907 முதல் 1933 வரை பிரம்மஞான சபையின் தலைவராக இருந்தார். சென்னை அடையாறு இவர்தம் பணிக்கு உரிய இடமாகத் திகழ்ந்தது.
தேசிய இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தார். நியூ இந்தியா என்ற நாளிதழை நடத்தினார்.
நியூ இந்தியா இதழைப் பின்ப்பற்றியே தமிழ் இதழ்கள் நடத்த நான் தூண்டப்பட்டேன் என்று கூறியுள்ளார்.
காந்தியடிகளுக்கு முன்புவரை இந்திய அரசியலில் பெருஞ்ச்செல்வாக்குப் பெற்றிருந்த தலைவர் அன்னிபெசண்ட் ஆவார்.
ஹோம்ரூல் என்னும் தன்னாட்சி இயக்கத்தை மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.
காங்கிகரஸ் மாநாட்டிற்குத் தலைமை தங்கிய முதல் பெண்மனி அன்னிபெசண்ட் ஆவார். மேலும் சாரணார் இயக்கத்தை இந்தியாவில் பரப்பினார்.
கல்வி தொண்டு :
காசியில் தொடங்கிய பள்ளிதான் பிற்காலத்தில் காசி இந்து பல்கலைகழகமாக மாறிற்று. இரவீந்தராத் தாகூரின் ஆதரவுடன் சென்னையில் தேசிய பல்கலைழகம் ஒன்றை சில ஆண்டுகள் நடத்தினார்.
இந்து சமயத்தின் மீது பெரும் மதிப்பு கொண்டவர் இந்து சமயம் சிறந்த முறையில் பேணப்படவில்லை என்றால், இந்தியாவிற்கு எதிர்காலம் கிடையாது. என்று கூறியிருக்கிறார்.
இந்திய மகளிர் சங்கத்தை நிறுவியவர்.
பெண்கள் உரிமை
இளமைத்திருமணத்தை எதிர்த்தார் பெண்கள் உரிமைக்கு பெண்கள் மறுமணத்திற்கும் குரல் கொடுத்தார்.
வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் மேம்பாட்டிற்கும் பெண் விடுதலைக்கும் பாடுபட்டவர்.
பிரம்மஞான சபை இந்து கலாச்சாரத்தையும் சமுதாயச் சீர்திருத்தத்தின் அவசியத்தின் அனைத்துத் துறைகளின் முன்னேற்றத்தையும் வலியுறுத்ததின் விளைவாக இந்திய தேசியம் துளிர்விட்டு, வளர வழி வகுத்தது என்றார் ஆர். சத்தியநாதையர்.
வினா:
1. இந்திய மகளிர் சங்கத்தை அமைத்து செய்த சமூக சீர்த்திருத்தங்கள் யாவை?
2. பிரம்ம ஞானச் சபையை யாருடன் இணைந்து தொடங்கினார்கள்?
3. இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக அமைய அன்னிபெசண்ட் கூறிய அறிவுரை யாது?
4. இந்தியாவில் அன்னிபெசண்ட் செய்த மாற்றங்கள் யாவை?
5. அன்னிபெண்டின் கல்வித் தொண்டு யாது?