கடந்த தேர்வுகளின் குரூப்2 வினா-விடை!
டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வை வெல்ல சிறந்த படிப்பும் தொடர்ந்து செயல்படும் போக்கும் இருக்க வேண்டும். திருப்பி பார்த்தல் ரிவைஸ் செய்தல் போன்றவை படித்தவை என்றும் நிலைத்திருக்கச் செய்யும். வெற்றியின் வாயிலை அடைய படியுங்கள் அத்துடன் படித்தவற்றை திரும்பவும் ரிவைஸ் செய்யுங்கள் வெற்றி உங்கள் வசமாகும்.
கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா-விடைகள் தொகுப்பு கொடுத்துள்ளோம். படிக்கவும்.
1.இந்திய அரசு சட்டம் 1919 குறிப்பிடபடுவது?
விடை: இரட்டை ஆட்சி
2. மேலவையின் தலைவர்
விடை: குடியரசு துணைத் தலைவர்
3. இந்திய குடியரசு துணைத் தலைவர் அலுவலகம்?
விடை: அரசியலமைப்பு மூலம் உருவாக்கப்பட்டது.
4. இந்திய குடியரசு தலைவர் பெற்றிருப்பது?
விடை: பெயரளவிலான அலுவலகம்.
5. இந்திய குடியரசு தலைவரின் தேர்தலுக்கு நிர்ணயிக்கப்படும் அதிகபட்ச வயது?
விடை: வயது வரம்பில்லை
6. இந்திய துணைகுடியரசு தலைவர்
விடை: மாநில சட்டமன்றத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்
7. நீதிக்கட்சியை தோற்றுவித்தவர் யார்?
விடை: இராஜ கோபாலாச்சாரியார்
8. பாராளுமன்ற மேலவையில் அதிகபட்ச இடங்களை பெற்றிருப்பது?
விடை: உத்திரப் பிரதேசம்
9. அமைச்சர்கள் தூது குழு யாருக்கு பொறுப்பானவர்கள்?விடை: பாராளுமன்றத்திற்கு
10. இந்திய குடியரசு தலைவராகப் போட்டியிட இக்குறிப்பிட்ட வயதை கடந்தவராக இருக்க வேண்டும்?விடை: 35 ஆண்டுகள்
11. இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவி வகிப்பது?விடை: ஐந்தாண்டு காலம்
12. சமரச சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியவர்?
விடை: வள்ளலாளர்
13. ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய நோக்கம்?
விடை: சுயராஜ்யம் பெறுவது.
14. முதல் இரும்பு பாதை 1853இல் எந்த இரு பகுதிகளில் அமைக்கப்பட்டது?
விடை: பம்பாய தானே.
15. கிலாபத் இயக்கம் யாருக்கெதிராக தொடங்கப் பட்டது?விடை: ஆங்கில அரசுக்கு
16. டேணியர்கள் வணிக தளம் அமைத்த இடம்?விடை:தரங்கபாடி
17. இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணி படைப்பிரிவிற்கு தலைமை வகித்தவர் யார்?
விடை: லட்சுமி செகல்
18. வங்காள பிரிவினைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் யார்?
விடை: கர்ஸன்
19. ஆசாத் ஹிந்த் பாஜ் என்ற அழைக்கப்படுவது எது?
விடை: இந்திய தேசிய இராணுவம்
20. வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு?
விடை: கி.பி.1806