டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் பேரூக்கு மேல் குரூப் 1 தேர்வானது எழுதினார்கள்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்கள்  இன்று தேர்வை முடித்துள்ளனர்.  தேர்வர்கள் சிறப்பாக  எழுதியதாக கூறியுள்ளனர். குரூப் 1 தேர்வானது தமிழ்நாடு முழுவதும் காலியாக 181 இடங்களுக்கு முதன்மை எழுத்து தேர்வை எழுதினார். 
குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 2, 30, 588 பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். சுமார் 1,150 விண்ணப்பங்கள்  முறையற்ற காரணத்தால் நிராகரிக்கப்படட்டது.

தேர்வானது  கடினமாக இருந்தது என்றும், கட் ஆப் குறைவாகத்தான் இருக்கும்.  பொது அறிவு  பாடங்கள் சிறப்பாக யோசிக்குமாறு டிரிக்கியாக இருந்தது என்று தேர்வர்கள் தெரிவித்தனர்.

வரலாற்று பகுதி

கட் ஆப் 140 க்குள் இருக்கவே வாய்ப்பு அதிகம் தேர்வர்கள் நேரம் மேலாண்மை செய்ய முடியாமல்  சிரமத்துள்ளனாகியிருக்கின்றனர். கணிதப் பகுதி  சிந்திக்க வைத்து  நேரத்தை அதிகம் இழுத்துக் கொண்டது. 
வரலாற்று பகுதிகளின் ஆண்டுகள் எல்லாம் தேர்வர்களை கொஞ்சம் சுத்த வைத்திருக்கின்றது.  அறிவியல் பாடம் கொஞ்சம் அதிக  கேள்விகளை கொடுத்து கொஞ்சம்  கடினமாக இருந்தது. 

பொருளாதாரப்  பாடங்களில் கொஞ்சம் அடிப்படைப் பகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. 
 தேர்வர்கள் புதுப்பாடத்திட்ட புத்தகங்கள் மற்றும் பழைய பாடப்புத்தகங்கள் இரண்டையும் நன்றாக படித்து ரிவிசன் செய்து இருப்பவர்கள் பொது அறிவப் பாடங்களுக்கு விடை கொடுக்க முடியும். 


யூபிஎஸ்சி அளவிற்கு  கொஞ்சம் தரமானதாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. யூபிஎஸ்சி தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள் குரூப் 1 ஒரு டெமோ போல இருந்திருக்கும். 

நடப்பு நிகழ்வு

நேர மேலாண்மையின்மையால்   கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் திணரியிருகின்றனர். தேர்வர்களிடையே அதிக அளவில் போட்டியிருக்கின்றது.  நடப்பு நிகழ்வுகளை சரியாக முக்கியத்துவம் கொடுத்து  படித்திருப்பவர்களுக்கு குரூப் 1 எளிதாக இருந்திருக்கும். 
குரூப் 1 தேர்வு முடிந்தது மற்றும் அதனுடன் இணைந்து தேர்வர்கள் மெயின்ஸ் தேர்வுக்கு தயராக கீ  தயாரிக்க தேட ஆரம்பித்துவிட்டனர்.   தேர்வு கடினமாக இருந்தது. இருப்பினும் சமாளிப்பது எளிதாக உள்ளது என சிலர் கூறியுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *