தேசப்பிதா காந்தி குரூப் 2 முந்தய ஆண்டு தொகுப்பு!
டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுகளில் முந்தய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா தொகுப்பினை இங்கு கொடுத்துள்ளோம் அதனை முழுமையாக படித்து தேர்வை வெல்லவும்.
1. காந்தியைப் பற்றி, ‘கௌதம புத்தருக்கடுத்து சிறந்த இந்தியர், ஏசு கிறிஸ்துவுக்குப் பின்னர் உலகத்தில் சிறந்த மனிதர்’ என்று கூறியவர்
விடை:ஜே.ஹெச். ஹோம்ஸ்.
2 ‘நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல, நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல, நான் எந்த அரசாங்கத்திற்கும் எதிரானவன் அல்ல,
ஆனால், உண்மைக்குப் புறம்பானவற்றிற்கு எதிரானவன்’ என்று தெரிவித்தவர்
விடை: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
3. காந்தியை படுகொலை செய்தவர் யார்?
விடை : நாதுராம் கோட்சே
4. கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அடிப்படை எது?
விடை: காந்தியக் கோட்பாடுகள்
5. ‘இந்தியன் ஒப்பினியன்’ பத்திரிகையை நடத்தியவர் யார்?
விடை: காந்தியடிகள்
6. காந்தி சகாப்தம் என்று அழைக்கப்படுவது எது?
விடை: 1920-1947
7. புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரமம் அமைத்தவர் யார்?
விடை: ராஜாஜி
8. தாகூருக்கு முன்பே 1910-ம் ஆண்டில் காந்தியை ‘மகாத்மா’ என்று அழைத்தவர்
விடை: பாரதியார்
9. நவஜீவன் பத்திரிகையை நடத்தியவர்யார்?
விடை: மகாத்மா காந்தி
10. காந்தியை எவ்வாறு அழைக்கின்றோம்?
விடை: தேசிய தந்தை
11. எல்லைகாந்தி என அழைக்கப்பட்டவர் யார்?
விடை: கான் அப்துல் கபார்கான்
12. காந்திஜியின் நவகாளி யாத்திரை கீழ்க்கணட எதை தடுப்பதற்காக நடைபெற்றது?
விடை: இனக்கலவரம்
13. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?
விடை: 1942
13. சௌரி சௌரா நிகழ்வு நடைபெற்ற ஆண்டு?
விடை: 1922
14. பட்டேலுக்கு சர்தார் என்ற பட்டத்தை அளித்தவர் யார்?
விடை: காந்தி
15. காந்திஜியின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய இடம் எது?
விடை: தென்னாப்பிரிக்கா
16. மகாத்மா காந்தி படுகொலை செய்யப் படட் நாள்?
விடை: ஜனவரி 30, 1948
17. காந்திஜியின் அரசியல் குரு யார்?
விடை: கோபாலகிருஷ்ண கோகலே
18. மகாத்மா காந்தியை தேசபிதா என குறிப்பிட்டவர் யார்?
விடை: சுபாஷ் சந்திர போஸ்
19. இந்திய சுதந்திரப் போராட்த்தின் போது மிக சக்திவாய்ந்த கோஷமாக அமைந்தது செய் அல்லது செத்து மடி அதனை வழங்கியவர் யார்?
விடை: காந்தி
20. காந்திஜியின் சம்பரான் இயக்கம் நடைபெற்றதன் காரணம் என்ன?
விடை: இண்டிகோ தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க போராடினார்.
குரூப் 2 தேர்வுக்காக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் சகாப்த வரலாற்றுப் பகுதியில் இருந்து முந்தய ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பினை இங்கு கொடுத்துள்ளோம். அதனைப் பின்ப்பற்றி படியுங்கள் தேர்வினை எளிதாக வெல்லலாம்