கல்விசெய்திகள்தேசியம்தேர்வுகள்

தேர்வு வழிகாட்டு முறைகள் மத்திய அரசு

பள்ளி கல்லூரி பல்கலைக் கழக தேர்வுகள் நடத்த மத்திய அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்திருக்கின்றது. கொரோனாவால் கடந்த 5 மாதங்களாக மக்கள் பொது முடக்கத்தில் இருந்தனர். பள்ளிகள் கல்லூரிகள் எதுவும் இயங்கவில்லை.

தேர்வுகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டன இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்த மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்திருக்கின்றது.

மத்திய அரசின் அறிவுரைபடி கொரோனா இருக்கின்ற மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட தேர்வு எழுத அனுமதி இல்லை. மேலும் அவர்கள் சிகிச்சையில் இருக்க வேண்டும். அவர்கள் குணம்னப்பின் தேர்வு எழுதலாம் என்று அரசு அறிவித்து இருக்கின்றது. மாணவர்கள் தேர்வு எழுதுவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தி இருக்கின்றது.

ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேர்வு அறைக்குள் நுழைய முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கின்றது. கல்வி நிலையங்கள் சோப், சோடியம் ஹைப்போ குளோரைட் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டுமென்று அரசு உறுதியாகக் கூறி இருக்கின்றது. ஆசிரியர்கள் தேர்வர்கள் உடல்நிலை சரியாக இருக்க வேண்டும். அதுகுறித்து அறிக்கையைத் தெரிவிக்க வேண்டும். அதன்பின்பே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா அறிகுறிகள் இல்லாத ஆசிரியர்கள் மாணவர்கள் மட்டுமே தேர்வு அறைக்குச் செல்ல முடியும். தேர்வுக்குக் கல்வி நிலையங்களுக்கு வரும் அனைத்து ஆசிரியர் மாணவர்கள் பணியாளர்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது எந்தக் காரணத்தைக் கொண்டும் கழட்டக் கூடாது. கூட்டமாக நிற்கக் கூடாது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

கேள்வித்தாள் விடைத்தாள் வழங்கும் முன்பு மாணவர்கள் ஆசிரியர்கள் இருவரும் கைகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். விடைத்தாள் சேகரிப்பு செய்யும் ஆசிரியர்கள் கைகளைப் பல முறை சுத்தம் செய்து கொள்ளுதல் நல்லது. விடைத்தாள்களை முறையாக அடுக்கி வைத்துக் கைகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வினாத்தாள் விடைத்தாள்களை ஆசிரியர்கள் எச்சில் படாமல் என்ன வேண்டும்.

விடைதாள்கள் வாங்கிய பின்பு அவற்றை 72 மணி நேரத்திற்கு பின்தான் பிரிக்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்றால் அவர்களுக்குத் தனி அறை தயாராக இருக்க வேண்டும் என அரசு தெரிவித்திருக்கின்றது. இது அரசின் விதிமுறையாகும் ஆனால் இது போன்ற கட்டுப்பாட்டிற்குள் மாணவர்கள் எவ்வாறு தங்களது தேர்வைப் பயமின்றி எதிர் கொள்வார்கள் என்பதை அரசு முழுமையாக ஆராய்ந்து பார்த்து இருக்கின்றதா என்ற கேள்விகள் இருக்கின்றது.

இது சிறந்த வழி தானா என்பதை ஆராய வேண்டும் மாணவர்கள் அதிக மன உளைச்சலுக்கும், பயம் பதட்டத்திற்கு ஆளாவார்கள் படித்தது நினைவில் இருக்க வாய்ப்பு குறைவு ஏன் இப்படியொரு இக்கட்டான சூழலில் மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் பிறந்த மாணவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு போராட்ட குணம் இருக்கின்றது. அந்தப் போராட்டத்தால் மாணவர்கள் தேர்வைக் கச்சிதமாக எழுதி முடிப்பார்கள் என்று நம்பப்படுகின்றது. அவர்களுக்கு அவர்களது மன உறுதியை துணையாக இருக்கட்டும் வாழ்த்துக்கள் மாணவர்களே தேர்வில் வெற்றி பெற்று அடுத்த இலக்கை நோக்கிப் பயணியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *