அதிவேக சாலை விபத்துகள் மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
ஆண்டுதோறும் இந்தியாவில் 5 லட்சம் விபத்துகள் ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன. உலகளவில் இது மிக அதிகம் என்று கூறப்படுகிறது. விபத்துக்களில் 1.5 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக கூறப்பட்டுள்ளது.
3 லட்சம் பேர் படுகாயம் அடைவதாக கூறப்படுகிறது. இதைக் குறித்து சாலை விபத்துகள் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு கிடைத்துள்ள தகவல்கள் படி கடந்த 2019 ஆம் ஆண்டில் 4,49,002 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 3,19,028 விபத்துகள் அதிவேகத்தில் ஏற்பட்டவை.
கடந்த ஆண்டில் அதிவேகத்தில் 3.19 லட்சம் சாலை விபத்துகள் மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்த விபத்தில் இது எழுபத்தி ஒரு புள்ளி ஒரு சதவீதம் என எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளார். கடந்த ஆண்டில் இந்தியா முழுவதும் நேரிட்ட சாலை விபத்துகளில் 4.49 லட்சம் விபத்துகளில் 71 சதவீத விபத்துகள் அதிவேக காரணமாக ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் விகே சிங் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.