குற்ற உணர்ச்சி ஓர் உயிர்கொல்லி
தெரிந்த எதிரி
கண்களுக்கு தெரிகின்ற எதிரிகளை கண்டறிவதும் வீழ்த்துவதும் எளிது. ஏனென்றால் நம் எதிரி யார்?, அவனின் பலம் என்ன?, அவனின் பின்புறம் என்ன?, அவனின் பலம் பலவீனம் என்ன என்பதை ஆராய்ந்து சண்டை செய்வது ஓர் பொது விதி.
ஆனால்,
தெரியாத எதிரி
எதிரி என்று ஒருவன் இருக்கிறான், அவன் நம்மை அனுதினமும் நம்மை அறியாமல் வீழ்த்திக் கொண்டிருக்கிறான், நம் உயிரை பறித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல் இருப்பது என்பது நாமே நம் எதிரியின் பலத்தை அதிகப் படுத்துகிறோம் என்பது பெரும் வேடிக்கையான விசயமாக உள்ளது.
குற்ற உணர்ச்சி சூழும் நேரத்தில் நம்மை மறந்து நம்மில் உள்ள புலம்பல்கள், குமுறல்கள், உணர்ச்சி பொங்கி எழும் செயல்கள் நடைபெறுகின்றன.
இது அனுதினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றதே இதனால் என்ன என்று நீங்கள் கேட்டால்,
குற்ற உணர்ச்சியின் விளையாட்டு
குற்ற உணர்ச்சி என்னும் எதிரி நம்மை மீண்டும் மீண்டும் ஆழ்ந்த சிந்தனைக்குள் செல்லச் செய்து, நம் மனதை சரியான பாதையை நோக்கி சிந்திக்க விடாமலும், செயல்பட விடாமலும் நம்மிடம் விளையாடிக் கொண்டிருக்கிறது
ஊடகங்களின் பங்கு
இந்த குற்ற உணர்ச்சியை ஏவி விடும் பங்கை ஊடகங்களும், தொலைக்காட்ச்சிகளும் மிகவும் பொறுப்பாகவும் கவனமாகவும் கையாண்டு கொண்டு வருகிறது. தன் நிகழ்ச்சிகளின் மூலம் எம தூதர்களை சரியாக ஏவி விட்டுக் கொண்டுள்ளது.
சமுதாயத்தின் பங்கு
பலமான சமுதாயம் உருவாகும் இடங்களில் குற்றமற்ற உணர்ச்சியில் நிறைந்த மனிதர்களையும், அன்பு சார்ந்த வாழ்வியல் வாழ்க்கையை வாழும் மனிதர்களையும் காண இயலும் என்பது நிதர்சனமான உண்மை.
ஆகவே குற்ற உணர்ச்சி என்பது நம் சக்தியை நாமே குறைத்துக் கொள்ளும் ஒரு செயல் என்பதை அறிந்து கொண்டு நம்முள் ஒலிந்திருக்கும் மறைமுக எதிரியை கண்டறிவோம்