மொறு மொறு வெங்காய பப்ஸ் செய்வது இவ்வளவு ஈஸியா….
அடிக்கிற குளிருக்கு ஏதாவது சூடா சாப்பிட்டா நல்லா இருக்கும் என்று அனைவரும் மனதில் நினைப்பர் அதுவும் மாலை வேளையில் ஏதாவது காரமாகவும் சூடாவும் இருந்தா எப்படி இருக்கும் என்று மனசுக்குள்ளே நினைச்சுட்டு வீட்ல செஞ்சு தரக்கு ஆள் இல்லையே அப்படின்னு நினைப்பீங்க ..ஒரு சிலர் இந்த மழை காலத்தில் கடைகளுக்கு சென்று அதை எதையும் வாங்கி சாப்பிட்டு பொழுதை கழிப்பர் ஆனால் வீட்டில் செய்தால் ஆரோக்கியமாகவும் மன திருப்தியாகவும் குடும்பத்துடன் சேர்ந்து கொண்ட மகிழ்ச்சியும் கிடைக்கும் அப்படி செய்யலாம்னு பாத்தா என்னதான் செய்கிறது எதுவும் வர மாட்டேங்குது என்று வீட்டில் உள்ள பெண்கள் புலம்புவர் இனி குழப்பம் வேண்டாம் ஈசியான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்….
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 200 கிராம்
மைதா மாவு – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 4
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
பொதினா மற்றும் மல்லித்தழை – சிறிதளவு
உப்பு தேவையான அளவு
என்னை தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
வெங்காய பப்ஸ் செய்யும் முறை
சுவையான வெங்காய பப்ஸ் செய்யும் முறை பற்றி கீழே காணலாம்..
ஒரு பாத்திரத்தில் 200 கிராம் கோதுமை மாவு மற்றும் அதில் பாதி அளவு மைதா மாவு மற்றும் தேவையான அளவு உப்பு எடுத்துக் கொள்ளவும் அதில் சூடான எண்ணெயை ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும் மேலும் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும் பிசைந்து வைத்த மாவை ஒரு மூடி போட்டு மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்கவும் பின்பு 20 நிமிடம் கழித்து ஊற வைத்த மாவை எடுத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மூன்று பெரிய வெங்காயத்தைஎடுத்துக்கொள்ளவும் அதில் சிறிது சிறிதாக நறுக்கி வைத்த பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும் பின்பு அதில் ஒரு டீஸ்பூன் அளவு மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சீரகத்தூள், கரம் மசாலா தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும் பின்பு அதில் மிகவும் சிறிது சிறிதாக நறுக்கிய பொதினா மற்றும் மல்லித்தழை இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து ஒரு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
நாம் ஏற்கனவே பிசைந்து ஊற வைத்த மாவை ஒரு அளவிற்கு சிறிதாக உருண்டை பிடித்துக் கொள்ளவும் பின்பு அதை மைதா மாவு சேர்த்து நன்றாக மிகவும் எளிதாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் அதை சரியான அளவிற்கு ஒரே மாதிரியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும் பின்பு அதனை சப்பாத்திக்கல்லில் வைத்து ஒரு இரண்டு நிமிடம் அளவு திருப்பி போட்டு லேசாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் எடுத்து வைத்த பப்ஸ் சீட்டில் முக்கோண ஷேப்பிற்கு மெதுவாக மடிக்க வேண்டும் பின்பு நாம் ரெடி பண்ணி வைத்த மசாலாவை அதனுள் வைத்துக் கொள்ளவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் மைதா மாவு ஒரு ஸ்பூன் இரண்டு ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு ஒரு பேஸ்ட் பதத்திற்கு கலக்கி எடுத்துக் கொள்ளவும் நாம் மசாலா வைத்து வைத்தை இந்த பேஸ்ட்டை வைத்து ஒட்டிக் கொள்ள வேண்டும் இவ்வாறாக ஒட்டி எடுத்து வைத்த பப்ஸ் சீட்டை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும் எண்ணெயில் பொன் நிறமாக வரும் வரை திருப்பி போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும் சூடான சுவையான மொறுமொறு பப்ஸ் ரெடி மாலை வேளையில் குடும்பத்துடன் அமர்ந்து இதனை சாப்பிட்டால் சூப்பராக சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் குடும்பத்துடன் பொழுதை கிடைத்த இன்பமும் கிடைக்கும்.