Ethirnechal serial update: எதிர்நீச்சல் புது ஆதி குணசேகரனுக்கு அடிச்ச லாட்டரி இவருக்கு இவ்வளவு மவுசா😱 என்ன காரணம்??
நமது சன் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த நாடகத்திற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. நாடகத்திற்காக மட்டுமல்ல அதில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்துவின் நடிப்பிற்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அவரின் நடிப்பால்தான் அந்த சீரியல் முன்னணி சீரியல் ஆக டிஆர்பியில் எகிறியது என்பதுதான் உண்மை. வில்லத்தனமும் , நகைச்சுவையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து நடிப்பது தான் அவரின் திறமை. மேலும் அந்நாடகத்தில் உள்ள பெண்களின் பேச்சுக்கும் நகைச்சுவைக்கும் அளவே இல்லை. இந்த சீரியலை பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அந்த அளவுக்கு அனைவர் மனதையும் ஈர்த்துள்ளது.

ஆதி குணசேகரன் மறைவு
மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியலில் திடீர் திருப்பமாக ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து திடீரென இறந்து விட்டார். அவரின் மறைவு தமிழ்நாட்டையே உலுக்கியது. ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மாரிமுத்து மரணம் யாராலும் ஏற்க முடியாத ஒன்றாக அமைந்தது . ஆணி வேரே சாய்ந்த பின்பு கிளைகள் எதற்கு என்பது போல ஆதி குணசேகரனை இல்லையென்றால் எதிர்நீச்சல் நாடகம் எதற்கு என்று ரசிகர்கள் கூச்சலிட்டு வந்தனர். இனி அவ்வளவுதான் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்று அனைவரும் நினைத்திருந்தனர்

சீரியலில் வந்த ட்டுவிஸ்ட்
எண்டு காடு போட்டுருவாங்க அப்படின்னு நினைச்ச சீரியலுக்கு நியூ எண்ட்ரி கொடுத்து மக்களுக்கு டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் ஆ வெச்சு எல்லாரையும் அதிக எதிர்பார்ப்புடனும், ஆவலுடனுமே வெச்சிருந்தாங்க…அதுக்கு காரணம் புது ஆதி குணசேகரன் ஆக யார் வரப்போகிறார் அவர் மாரிமுத்துக்கு நிகராக இருப்பாரா அவர் நடிப்பில் பாதியாவது அவருக்கு வருமா என எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் மாரிமுத்துவிற்கு பதிலாக ஆதி குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி புது என்று கொடுத்தார். அவரும் தன்னால் முடிந்த அளவிற்கு தனது திறமையை காட்டி வருகிறார். ஆனால் இவர் முன்பு இந்த கேரக்டருக்கு நான் வரவில்லை என்று கூறியிருந்தார் அப்ப எப்படி வந்தாரு..
மேலும் படிக்க ; ஆதிகுணசேகரனுக்கு ஆப்பு வைக்கும் அப்பத்தா எதிர்நீச்சல்

புது ஆதி குணசேகரணுக்கு அடிச்ச லாட்டரி
முதலில் சீரியலுக்கு வரமாட்டேன் என்று சொன்ன வேல ராமமூர்த்தி இப்பொழுது எப்படி ஆதி குணசேகரன் ஆக களம் இறங்கினார். இதற்கு காரணம் முதலில் ஆதி குணசேகரன் ஆக நடித்த மாரிமுத்துவிற்கு ஒரு நாளைக்கு 20,000 சம்பளம். ஆனால் இப்பொழுது புதிய ஆதி குணசேகரன் ஆக வந்த வேல ராமமூர்த்தியின் ஒரு நாள் சம்பளம் 40,000 ரூபாய் ஆகும்.
மேலும் படிக்க : எதிர்நீச்சலில் அடுத்த ஆதிகுணசேகரன் இவர் தான்; வந்துட்டாருயா வந்துட்டாரு