அன்பும் உறவும்சினிமாவாழ்க்கை முறை

முடிவில்லாத நட்பு இசை சகாப்தம்

“நல்ல நண்பன் வேண்டும் என்று மரணமும் நினைக்கின்றதா?
சிறந்தவன் நீதான் என்று உன்னை கூட்டிச்செல்ல பிடிக்கிறதா?”

கவிஞர் கண்ணதாசன் வைரமுத்து வாலி சினேகன் நா. முத்துக்குமார் பா. விஜய் இப்படிப் பலர் கவித்துவமா பல பாடல்கள் கொடுத்தாலும் நட்புக்குனு வரும் போது எல்லாருக்கும் எல்லாரோட வாழ்க்கையிலும் இணைஞ்சு ஒவ்வொருத்தரும் தன்னோட வாழ்க்கையில அதை உணர்வுபூர்வமாக அறியப்படற மாரி முத்து முத்தான பாடல்களை கொடுத்து இருக்காங்க. கவிஞர்கள் கொடுக்கும் வார்த்தையில இசையமைப்பாளர்கள் பூந்து விளையாடி நம்மளோட உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பிட்ராங்க.

“என் மனதை உழுது
நல்ல விதையாய் விதைத்தாய்
என்னை நானே செதுக்க
நீ உன்னையே உலியாய் தந்தாய்”

உற்றார் அழ அழ சொல்லுவாங்க ஊரார் சிரிக்க சிரிக்க சொல்லுவாங்க இந்தப் பழமொழிக்கு ஏற்ப நட்பு துணை நிற்கும். நம்ம தூவண்டு விழுந்தா கைகொடுத்து எழுப்பவும் தடுமாறினா ஊக்குவித்து முன்னேறவும் கூடவே நிற்பது நட்பு.

“அந்த நேசம் இந்த பாசம் நட்பைப்போல எங்கும் ஏதும் உயர்ந்தது இல்லை”

எல்லா உறவுக்குள்ளையும் நட்புங்கிறது அடி தளமா இருந்தா அந்த உறவும் காலம் பூரா நீடித்து நிலைத்து நிற்கிது. அந்த நட்பு உடையும்போது மனம் படும் பாடு திண்டாட்டம். எந்த உறவு உடைஞ்சாலும் நட்பு கிட்ட போய் நிக்கலாம் நட்பே உடைஞ்சுதுனா எங்க போய் நிக்கறது!

“மனசே மனசே மனசில் பாரம்
நண்பர்கள் கூட்டம் பிரியும் நே
ரம்”

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதிகளிலும் வரும் நட்பு காலம் பூரா வந்தாலும் அங்கங்க நம்ம சொல்ற சிறுசிறு டாட்டா பாய் பாய் மனதோடு ஓரத்தில் ஒரு சிறு வலியா இருக்கு.

“கண்மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருவாய்”

பள்ளி முடிந்து கல்லூரி; கல்லூரி முடிந்து வேலை இப்படி அங்கங்கே சொல்லப்படுற சின்ன சின்ன குட்பைய் தூரத்திலிருந்து நம்ம நண்பர்களாக இருந்தாலும் கூட இருக்கும் போது அந்த கேலி கிண்டல் சந்தோஷமான வாழ்க்கை இல்லையே அப்படிங்கிற ஒரு ஏக்கம் மனதோரத்தில எப்போதுமே நீடித்து நிற்குது. அதுக்கு காலமே மருந்து அமையுது.

“பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்”

நினைத்தாலே இனிக்கும்! ஒவ்வொரு நொடியும் நினைத்தாலே இனிக்கும். இந்த நண்பர்கள் தினத்துல சிலேட்குச்சி வாசகர்களான நண்பர்களுக்கு இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *