தேவையான சத்துக்கு காய்கறி கட்லெட் கொடுங்க
காய்கறி சாப்பிடவில்லை என்ற கவலை இனி இருக்காது. காய்கறிகளை ஒதுக்கிவைக்கும் குழந்தைகளுக்கு இந்த காய்கறி கட்லெட் செய்து கொடுங்க. உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், பீன்ஸ், தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் விரும்பி உண்ணுவார்கள். வாரம் ஒரு முறையாவது இந்த கட்லெட்டை செய்து கொடுக்க வேண்டும். இந்த கட்லெட்டை நீங்களும் செய்து பாருங்க.
- காய்கறி சாப்பிடவில்லை என்ற கவலை இனி இருக்காது.
- காய்கறிகளை ஒதுக்கிவைக்கும் குழந்தைகளுக்கு இந்த காய்கறி கட்லெட் செய்து கொடுங்க.
- தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் விரும்பி உண்ணுவார்கள்.
வெஜ் கட்லெட்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு 3, பச்சை பட்டாணி ஒரு கப், கேரட் 150 கிராம், காலிஃப்ளவர் கால் கப், பீன்ஸ் கால் கப், ஒரு பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 5, மிளகாய்த்தூள் 2 ஸ்பூன், மஞ்சள் பொடி அரை ஸ்பூன், பால் 2 கப், மைதா ஒரு கப், எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
அவித்த உருளைக்கிழங்கு, பட்டாணி, துருவிய கேரட், பீன்ஸ் காலிஃப்ளவர், உப்பு சேர்த்து கொள்ளவும். பின்பு எல்லாவற்றையும் ஒன்றாக மிளகாய் தூள், மசாலா பொடி கலந்து பிசைந்து வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அரிந்த வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி, பின்பு பிசைந்து வைத்த காய்களை சேர்த்து சிவக்க வதக்கி கொள்ளவும்.
இதை கொத்தமல்லி தழையை தூவி பின்பு ஆறிய பின் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
மைதா மாவில் உப்பு போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். தோசைக்கல் வைத்து எண்ணெய் ஊற்றி உருண்டைகளை தட்டையாக தட்டி பிறகு மைதா மாவில் நனைத்து பிரட் தூளில் மேல் இரு பக்கங்களிலும் வைத்து எடுத்து கொள்ளவும்.
தோசைக்கல்லில் வைத்து எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் சுவையான காய்கறி கட்லெட் தயார்.