ESIC நிறுவனத்தில் ஒரு லட்சம் சம்பளத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு!!
ESIC நிறுவன காலியாக உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் மாத ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே இந்த அரிய வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
காலிப்பணியிடம்
Specialists, Senior Resident, Part Time Ayurvedic Physician, Part Time Homeopathy Physician பணிக்கென காலியாக உள்ள 11 பணியிடங்கள் தற்போது நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகத்தில் Ayurvedic , Homeopathy, DNB , என பணிக்கு சம்பந்தமான ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 முதல் 45 வரை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்
ESIC நிறுவன வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க கடைசி தேதியான 2.04.2024 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.