சினிமாசினிமா பாடல்கள்

என்ன பண்ணி தொலைச்ச… முத்துக்கு முத்தாக படம்

முத்துக்கு முத்தாக இப்படம் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இப்படத்தில் குடும்பம் பிரிவால் வரும் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இதில் விக்ராந்த் சரண்யா சுஜித் பாலா இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் கவி பெரிய தம்பி ஆவார்.

பாடல் வரிகள்:

என்ன பண்ணி தொலைச்ச
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே
என்ன பண்ணி தொலைச்ச
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே

என்ன பண்ணி தொலைச்ச
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே
என்ன பண்ணி தொலைச்ச
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே

தனிமையில சிரிக்கிறேன்
தாளாமல் தவிக்கிறேன்
ராத்திரியில் முழிக்கிறேன்
விடிஞ்சவுடன் படுக்குறேன்

எனக்கே தெரியாம நீ தான்
என்ன பண்ணி தொலைச்ச

பீர் அடிக்க புடிக்கல
பீடி கூட புடிக்கல
எனக்கு நீ என்ன பண்ணி தொலைச்ச

ஹோ சோறு தண்ணி புடிக்கல
சொந்தபந்தம் புடிக்கல
எனக்கு என்ன பண்ணி தொலைச்ச

என் வீட்டு வழி தெரியாம
எங்கேயோ போனென் புரியாம
என்ன பண்ணி தொலைச்ச

நான் உன்னை எண்ணி இலச்சேன்
நீ வந்து ஏதாச்சும் சரிப்பண்ணுடா

என்ன பண்ணி தொலைச்ச
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே
என்ன பண்ணி தொலைச்ச
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே

குண்டு மல்லி புடிக்கிது
குப்பைத்தொட்டி புடிக்கிது
எனக்கு நீ என்ன பண்ணி தொலைச்ச

பெரியாரும் புடிக்கிது
பெருமாளும் புடிக்கிது
எனக்கு நீ என்ன பண்ணி தொலைச்ச

குடை இருந்தும் அத புடிக்காம
நனைஞ்சேனே நானும் புரியாம
என்ன பண்ணி தொலைச்ச

நான் உன்னை எண்ணி இலச்சேன்
நீ வந்து ஏதாச்சும் சரிப்பண்ணுடி

என்ன பண்ணி தொலைச்ச
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே
என்ன பண்ணி தொலைச்ச
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே

தனிமையில சிரிக்கிறேன்
தாளாமல் தவிக்கிறேன்
ராத்திரியில் முழிக்கிறேன்
விடிஞ்சவுடன் படுக்குறேன்

எனக்கே தெரியாம நீ தான்
என்ன பண்ணி தொலைச்ச

மேலும் படிக்க : பொன்னி நதி பாக்கணுமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *