யானைகள் மனித மோதலை தடுக்க புது திட்டம்..
யானைகள் மனித மோதலை தடுக்க அசாமில் உள்ள கிராமத்தினர் உருவாக்கிய திட்டம் பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது
உணவு தேடி அவ்வப்போது யானைகள் அருகே இருக்கும் கிராமத்திற்கு புகுந்தி அங்குள்ள விளை நிலங்களை அழித்து வருவதாக இதன் காரணமாக மனித-யானைகள் மோதல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு யானைகள் வழித்தடம் தான் அது என்றும், மனிதர்கள் தான் யானைகள் வழித்தடத்தை ழித்து கட்டுமானங்கள் நிறுவி வருவதாக வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
மேலும் வனத்திற்கு சுற்றுலா செல்லும், மனிதர்கள் அங்கு, பாட்டில், பிளாஸ்டிக் போன்ற அழிவு பொருள்களை கொண்டு வருவதாகவும், இதனால் வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி வந்தனர்.
இந்நிலையில், அஸ்ஸாமில் மனித யானை மோதலை தடுப்பதற்கும் யானைகளிடம் இருந்து தங்கள் பயிர்களை பாதுகாக்கவும் நாகாவூன் மாவட்ட கிராம மக்கள் காட்டிலிருந்து யானைகள் வரும் வழியில் உள்ள தரிசு நிலத்தில் புற்கள், தீவணங்கள் வளர்த்து காட்டு யானைகளுக்கான உணவு மண்டலத்தை (Food Zone) உருவாக்கியிருக்கிறார்கள்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் அருகில் உள்ள சில கிராமங்களில் இயற்கை ஆர்வலரான பினோத் டுலு போரா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து இதை செயல்படுத்தி உள்ளனர்.இதனால் கிராமப்புறங்களில் உள்ள விளைநிலங்களுக்குள் படையெடுக்கும் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், பயிர்கள் சேதமடைவதும் குறைந்துள்ளதாகவும் நாகவூன் DFO பாஸ்கர் தேகா தெரிவித்துள்ளார்.