செய்திகள்தேசியம்

மழம்புழா யானை இறப்பு மனித அலட்சியத்தின் அவலம்

கேரளாவில் நடந்த பெண்யானை கொடூரத்தின் பின்னணியை அலசி ஆராய்ந்துள்ளனர்.

மத்திய அரசு இந்த சம்பவத்தை தீரவிசாரித்து தகுந்த விளக்கத்தை கேட்டுள்ளது. 

மழப்புழா பகுதியில் வாழும் மக்கள் தன் பயிரை காப்பாற்றுவதற்காக இவ்வாறு பழத்தினுள் நாட்டு வெடி மருந்துகளை வைப்பது வழக்கமாக இருக்கும் குறிப்பாக காட்டுப்பன்றியை அழிப்பதற்காக வைக்கப்பட்ட இந்த பழத்தை பாவம் அந்த யானை தின்று இறந்தது.

அப்பழத்தை தின்ற அந்த பெண் யானை பட்டாசால் ஏற்பட்ட வாய்ப்புண்ணை ஆற்றுவதற்கு பாலக்காடு பகுதியில் உள்ள ஆற்றில் இறங்கி உள்ளது. அதனின் ஆழ்மனதிற்கு தான் இறக்கப் போகிறோம் என்பதை அறிந்து, காப்பாற்ற வந்த வனத்துறையினரை அருகில் சேர்க்காமல் மே 27 அன்று ஜலசமாதி அடைந்தது. அதற்கு 20 நாட்கள் முன்பே அப்பழத்தை உண்டு வாய் புண்ணாகி மேலும் எந்தவித உணவும் உட்கொள்ள முடியாமல் கடும் பசிக்கு உள்ளாகி இறந்துள்ளது.

பிரேதப் பரிசோதனையில் அதனுள் கரு இருக்க தெரியவந்தது. மருத்துவர்களும் வனத்துறை அதிகாரிகளும் கண்ணீர் மல்க யானையை தகுந்த மரியாதையுடன் அந்த  யானை விளையாடிய இடமான அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் இறுதி சடங்குகளை முடித்துள்ளனர்.

இந்த செய்தி ட்விட்டரில் வனத் துறை அதிகாரியான திரு மோகன் கிருஷ்ணன் அவர்களால் சொல்லப்பட்ட பின் ஊடகங்களில் தெரியவந்துள்ளது.

கொதித்து எழுந்த ஊடகங்கள் சொன்ன செய்தியால் மக்களுக்கும் அந்தக் கொதிப்பை பரப்பி பாராளுமன்றம் வரை இந்த செய்தி அடைய மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது மத்திய அரசு தகுந்த விளக்கத்தை அளிக்குமாறு கேட்கையில் மத்திய அமைச்சரான திரு பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் “நமது இந்திய கலாச்சாரத்தில் வெடி மருந்தை கொடுத்து யானையை கொல்வது என்பது கிடையாது. ஆனால் பழத்தில் வெடிமருந்தை வைத்த குற்றவாளி கண்டிப்பாக தண்டிக்கப் படுவான்” என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்தப் பெண் யானை பழத்தை உண்ட சம்பவம் மலப்புரம் பகுதியில் நடந்தாலும் அது ஜலத்திலிருந்து உயிரை விட்டது பாலக்காட்டு பகுதியில் என்று அறியப்படுகிறது.

‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று கூறுவது போல அறியாமல் செய்த தவறாயினும் பழத்தில் வெடிமருந்து வைத்தது தவறு தான். இனிமேலும் அலட்சியம் தவிர்க்க வேண்டிய்து அவசியம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *