மின்சார விபத்து கேர்புல்லா இருங்க.!
காற்றுக் காலம் மழை காலம் தொடங்கிவிட்டால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மின் விபத்து செய்யக்கூடாதவை களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்க. மின்சாரத்தால் அதிகமாக பாதிப்புக்குள்ளான நபராக இருந்தால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று விடுவது நல்லதுங்க. 108 ஆம்புலன்சை வரச் சொல்லி அது கூட்டிச் செல்லலாம். 108 ஆம்புலன்ஸில் உதறல் நீக்கி கருவி மற்றும் முதலில் முதலுதவிக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதுங்க.
சரியாக பின்பற்றினாலே போதும்
மின்சார விபத்து ஏற்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காகவே 108 , 104 இரண்டு எண்களுக்கு அழைத்தால் அவர்கள் முதலுதவி காண வழிமுறைகளைச் சொல்லித் தருவாங்க. அதை சரியாக பின்பற்றினாலே போதும் பாதிப்பு குறைந்து விடுங்க. அதாவது விபத்துக்குள்ளான வரை, சமதளத்தில் படுக்க வைங்க, ஒரு கைக்குட்டையை அவர் வாயில் வைத்து மூச்சு காற்றை ஊதி உள்ளும் புறமுமாக ஊதி இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் மார்பின் இடது பக்கம் நன்றாக கையை வைத்து அழுத்தி கொடுக்க வேண்டுங்க. மின்சாரம் தொடர்பான எந்த புகாராக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள மின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்க. 1912 என்கிற புகாருக்கு அழைத்து புகார் தெரிவிங்க. சிபிஆர் இதயம் மற்றும் சுவாசம் மீட்பு நடவடிக்கை செய்ய வேண்டும். பழைய வீடுகளில் மழையின் போது சுவரில் ஈரம் பரவி இருக்கும். இந்த நேரத்தில் மிகவும் கேர்புல்லா இருங்க.
இரும்புக் கம்பிகளை உபயோகபடுத்தாதீங்க
அப்படி ஈரம் பரவியிருக்கும் சுவர்கள் அருகிலிருக்கும் ஸ்விட்ச் பாக்ஸை தொடாக்திங்க. ஈரம் காய்ந்த பின்னரே பயன்படுத்துங்க. அதே போல் மாடியிலிருந்து உடைகள் வலது கையால் எடுக்க முடியாத இடங்களில் விழுந்து விட்டால், அதை இரும்புக் கம்பிகளைக் கொண்டு எடுக்காதிங்க. தலைக்கு மேல் செல்லும் மின்சார வயர்களை உரசி செல்லும் படியான கொடிகளில் ஈரத் துணிகளை காயப் போடாதிங்க.
கேபிள்களை தொடக்கூடாது. தண்ணீர் தேங்கியிருக்கும் நேரங்களில் அருகில் யாரும் செல்லாதிங்க. அதே போல் தேங்கியிருக்கும் தண்ணீரில் அதிக அளவுக்கு வந்து விட்டால் உடனடியாக அருகில் இருக்கும் மின்சார அலுவலகத்தில் தெரிவிங்க. சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை கண்டால் உடனடியாக பக்கத்தில் இருக்கும் மின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிங்க. அதற்கு முன் பகுதி வழியாக யாரும் செல்ல முடியாதபடி தடை ஏற்படுவது சிறந்ததுங்க.
முதலுதவி அளிக்க
ஏனெனில் சாலை விபத்துகள் போலன்றி மின் விபத்துகளில் உயிர் பலி நிச்சயம் எனும் அளவுக்கு சேதம் உள்ளதுங்க. திடீரென ஒருவருக்கு சாகடித்து விபத்து ஏற்பட்ட அவருக்கு எந்த மாதிரியான முதலுதவி அளிக்க வேண்டும். அந்த சமயத்தில் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளதுங்க.
மழை நேரத்தின் போது சாலைகளில் வாகன விபத்துகள் மட்டுமல்ல மின் விபத்துகளும் ஏற்படுகின்றன. இது போன்ற விபத்துக்களை தடுப்பதற்காகவே அரசு பல நடவடிக்கைகளை மட்டும் கொடுத்தால் போதாது பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நீங்களும் பாலோவ் பண்ணுங்க. குழந்தைகளுக்கும் இத சொல்லிகுடுங்க.