தேர்தல் ரத்து:- மாநில தேர்தல் ஆணையம் அதிரடி..!
தேர்தல் விதிமுறைகள் பின்பற்றாததால் தேர்தல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆளுமையை காட்ட வேண்டும் என அதிமுகவினர் ஒரு பக்கம் களமிறங்கியுள்ள நிலையில், திமுகவின் கீழ் மட்ட தொண்டர்கள், இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு வாக்குகளை குவித்து, தனது செல்வாக்கை தலைமைக்கு காட்ட வேண்டும் என உபிக்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க, சில இடங்களில் சுயேட்சை வேட்பாளர், திமுக, அதிமுக, ஏன், பாஜக வேட்பாளர்கள் கூட போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கத்தினர் 21 வயது நிரம்பாதவர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்து, பின் நிராகரிப்பட்டத சம்பவம் அங்காங்கே நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தலை ரத்து செய்வதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. தேர்தல் அலுவலர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாக தேர்தல் ரத்து செய்துள்ளதாக கூறிய தேர்தல் ஆணையம், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.