வாழ்வில் ஒவ்வொருவரும் ஏகாதசி விரதத்தை ஏன் மேற்கொள்ள வேண்டும்
ஆடி மாதம் தொடங்கும் இந்த நாள் ஏகாதசி கூடிய நன்னாளில் தொடங்குகிறது. ஒரு வருடத்தில் 365 நாட்களில் 24 ஏகாதசி நாட்கள் மேல் சில நாட்கள் மீதி இருக்கும்.
சில வருடங்களில் 25 ஏகாதசிகள் வரும் 25 ஏகாதசிகள் இருக்கும். உத்தரகாண்டத்தில் தனித்தனி பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாதத்தில் பௌர்ணமி அடுத்த 15 நாட்களில் வரக்கூடிய ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி என்றும்.
அம்மாவாசைக்கு பிறகு வரக்கூடிய 15 நாட்களில் சுக்லபட்ச ஏகாதசி என்றும் அழைப்பர். அதாவது தேய்பிறையில் பவுர்ணமி முடிந்து தேய்பிறை நாட்களில் வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி.
அம்மாவாசை அடுத்து வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி என்றும் கூறுவர். 12 மாதங்களில் வரும் ஏகாதசி இருக்க முடியாதவர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருப்பதால் மற்ற ஏகாதசியில் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
பகவான் கீதை என்னும் ஞான உபதேசத்தை கொடுத்தது இந்த மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி நாள் தான் வைகுண்ட ஏகாதசி, கீதா ஜெயந்தி என்று போற்றப்பட்டுள்ளது. இதற்கு மோட்ச ஏகாதசி என்ற பெயரும் உண்டு.
ஆடி கிருஷ்ணபட்ச ஏகாதசி ஆன யோகினி ஏகாதசி இன்று. இன்றைய தினம் விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீ ஹரி ஸ்தோத்ரம், மகாவிஷ்ணு சம்பந்தப்பட்ட ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து. முடிந்தவரை விஷ்ணு காயத்ரி மந்திரத்தை குறைந்தபட்சம் 108 முறை கூறலாம்.
விஷ்ணு காயத்திரி
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
இந்த எளிமையான விஷ்ணு காயத்திரி மந்திரத்தை உச்சரிக்கலாம்
மனிதப் பிறவி எடுத்து விட்டால் 8 வயதுக்கு மேல் 80 வயதிற்கு உட்பட எல்லோரும் இரண்டு பட்சங்களிலும் ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றன.
இப்படிச் சொன்னதால் எட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 80 வயதிற்கு மேற்பட்டவர்களும் ஏகாதசி உபவாசம் இருக்க கூடாது என்பது அர்த்தமில்லை. சிரமம் இல்லாத பட்சத்தில் யார் வேண்டுமானாலும் இந்த உபவாசத்தை மேற்கொள்ளலாம்.
வருடத்தில் எல்லா ஏகாதசிகளிலும் பூரண உபவாசம் இருக்க முடியாவிட்டாலும் வைகுண்ட ஏகாதசியில் உபவாசம் இருந்து ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருட் கடாட்சத்தை பெறுவோம்.