சண்டே ஸ்பெஷல் முட்டை பரோட்டா..!!
முட்டையில் பலவிதமான உணவுகளை செய்யலாம். வாரத்திற்கு மூன்று முறை பெரியவர்களும், தினமும் குழந்தைகளுக்கு வேக வைத்த வெள்ளைக்கரு மட்டும் கொடுத்து வருவதால் புரோட்டின் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். ஒரே மாதிரியாக முட்டை சாப்பிட்டால் போரடித்து விடும்.
டிசஸ் கொடுப்பதற்கு பதில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். எப்படி வேண்டுமானாலும் முட்டையை சேர்த்து கொள்ள முடியும். முட்டையை வைத்து பரோட்டா செய்யலாம் வாங்க. கடையில் வாங்குவதற்கு பதிலாக ஈஸியாக வீட்டிலேயே நாம் செய்து கொடுக்கலாம்.
முட்டை பரோட்டா
தேவையான பொருட்கள் : மைதா மூன்று கப், சர்க்கரை ஒரு ஸ்பூன், எண்ணெய் 3 ஸ்பூன், உப்பு தேவையான அளவு. பேக்கிங் பவுடர் கால் ஸ்பூன், முட்டை 2.
செய்முறை : மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், அதோடு சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். நடுவில் ஒரு பள்ளம் செய்து முட்டையை உடைத்து ஊற்றி, போதிய அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து பதமான மாவைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
மேலே எண்ணையை ஊற்றி 2 மணி நேரம் மூடி வைத்து விடவும். ஒரு எலுமிச்சை அளவு மாவு எடுத்து கொண்டு, மெல்லிய சப்பாத்தி போல் செய்து மேலே சிறிதளவு எண்ணெய் தடவிக் கொள்ளவும். புடவை கொசுவம் போல மடித்து கொள்ளவும். மீண்டும் உருண்டையாக செய்து கொள்ளவும். கைகளால் தட்டி சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுத்தால் சூடான முட்டை பரோட்டா தயார்.
இதை வெஜ் சால்னா வைத்து பரிமாறலாம் அல்லது ரோட்டாவை பொடிதாக வெட்டி, முட்டை உடைத்து ஊற்றி தாளித்து பரோட்டாவை இதில் போட்டு கிளறி கொடுக்கலாம். முட்டை விரும்பி சாப்பிடாதவர்களுக்கு ஒரு முட்டை மட்டும் மாவில் ஊற்றி பிணைந்து பரோட்டாவை சுட்டு கொடுக்கலாம்.