பள்ளிகள் திறப்பு குறித்து கல்வியாளர் பேட்டி
பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக நல்ல மதிப்பெண்களைப் பெற முடியாது. 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது வரவேற்கத்தக்கது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ். நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்வுகளை எதிர் கொள்வதற்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் போதாது.
போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகள் ஆரம்பித்துவிட்டதால் பள்ளிகளை திறக்க வேண்டியது வரவேற்கத்தக்கது. மாணவர்கள் போட்டித் தேர்வை நன்றாக எழுதுவதற்கு பள்ளித் தேர்வுகளை சிறப்பாக எழுத வேண்டும்.
பள்ளித் தேர்வுகளை நன்றாக எழுதுவதற்கு ஆன்லைன் வகுப்புகள் போதாது. தினமும் பள்ளிக்கு சென்று படித்தால் மட்டுமே சிறப்பாக தேர்வுகளை எழுத முடியும். உடல் நலனை கருத்தில் கொண்டு அதற்கேற்ற பாதுகாப்புகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.