கல்வியின் அவசியம் அறிவோம்!
கல்வியின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்திருக்கின்றது. இன்றைய சூழலில் உலகே முடக்கி கிடக்கின்றது. உலக அளவில் மக்கள் ஸ்தம்பிக்கும் நிலையிலும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் ஆன்லைனில் தற்பொழுது பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி என்பது அவசியமாகின்றது.
கல்வியின் நோக்கங்களே எதிர் பார்க்கும் கற்றலின் விளைவுகள்.
நல்ல குடிமகனை உருவாக்குதல்
முழு உள்ளார்ந்த தனி மனிதப் பண்பை வெளி கொண்டுவருதல்
தற்சார்பு உடையவனாக மாற்றுதல்
சட்டத்தையும் பிறர் உரிமைகளையும் மதித்தல்
சுதந்திரமான சிந்தனை , சுதந்திரமான செயல் ,பிற நலனில் உணர்வுகளிலும் அக்கறை காட்டல்.
நெகிழும் தன்மையோடு படைப்பாற்றலோடும்
புதிய சூழ்நிலைகளை எதிர் கொள்ளுதல்,
சமூக மாற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் தானாக முன் வந்து பங்களிப்பு கொடுத்தல் ஆகிய பண்புகளை வளர்த்தல்.
சுய சிந்தனையுடன் இருக்கச் செய்ய கல்வி அவசியம் ஆகின்றது.
கல்வி நல்லப் பண்புகளை கற்றுக் கொடுக்கும். பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யும்.
நாகரிக மாற்றத்திற்கு ஏற்ப நாம் முழுமையாக செய்யப்பட வேண்டும்.