யுஜிசி கல்வி நிறுவனங்களுக்கு வெளியிட்ட நெறிமுறைகள்
உயர்கல்வி நிறுவனங்கள் குறைந்தது 3 இளநிலை பாடப் பிரிவும், பத்து முதுநிலைப் படிப்பு தொடங்க வேண்டும் என்ற விதிமுறைகளை பின்பற்றுவது பற்றி பிராமண பத்திரம் ஒன்றை உயர்கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இணைய வழி கல்வி
இணைய வழி கல்வியை தொடங்க விரும்பும் கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளன. சுழற்சி அடிப்படையில் அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது குறைந்தது இரண்டு முறையாவது தரவரிசையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
உயர்கல்வி நிறுவனங்கள்
இணைய வழிக் கல்வியை தொடங்க உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சிலில் மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண் அல்லது தேசிய கல்வி நிறுவன தரவரிசையில் 100 இடங்களுக்குள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளன.
கல்வி முறைக்கு முக்கியத்துவம்
திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வியைத் தொடர்ந்து இணையவழிக் கல்வி முறைக்கும் முக்கியத்துவம் வழங்கி வரும் யுஜிசி இணைய வழி கல்வியை மேற்கொள்ளும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.
யுஜிசி புதிய வழிகாட்டு
நாடு முழுவதும் இணைய வழிக் கல்வியை பின்பற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ‘நாக்’ அமைப்பின் அங்கீகாரம் கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக்குழு யுஜிசி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் கல்வி உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி வெளியிட்ட நெறிமுறைகள் என்பது குறிப்பிடத்தக்கது.