குரூப் 2 தேர்வுக்கான பொருளாதார குறிப்புகள் பகுதி 5!
டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வுக்கான போட்டி தேர்வுகளுக்கு படித்து கொண்டிருக்கின்றீர்களா உங்களுக்கான பொருளாதார குறிப்புகளின் ஹைலைட்ஸ் கொடுத்துள்ளோம் படியுங்கள் கனவு வாரியத்தை வெல்லவும்.
போட்டி தேர்வு என்பது கடினமானது அதனை வெல்ல கடுமையான உழைப்பு மற்றும் ஸ்மார்ட் என்ற புத்திசாலித் தனமாக பயிற்சியினால் எளிதாக படிக்க வேண்டும்.
இந்தியாவில் வேலையின்மைக்கான காரணங்கள்:
வளர்ச்சியடைந்த பொருளாதாரம் போதிய வேலையின்மையின்மையும் மனித ஆற்றல் திட்டமிடலின்மையும் இந்திய பல்கலைகழகங்களிலிருந்து உருவாக்கப்படும் பெருவாரியானன பட்டதாரிகள்.
வேலையின்மையுக்கான தீர்வுகள்: விரைந்த பொருளாதார மேம்பாட்டிற்கு உழைப்பு செறிந்த திட்டங்களுடன் கூடிய பரந்த தொழில் பயமாதல் தற்கால இலக்கிய கல்வி போன்றவற்றை விடுத்து தொழிற்கல்விக்கும் வேலை சார்ந்த படிப்புகளுக்கும் சிறப்பிடம் தருதல் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் வேளாண்மையில் அறிவியல் முறைகளைப் பயன்படுத்துதல் மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தின் வேகத்தை அனைத்து நிலைகளிலும் திறமையாக கட்டுப்பட்டுதல் ஈடுகட்டும் பொதுப் பணிகள் தொடங்கப்படுவதுடன் அனைத்து நிலைகளிலும் வேலை வாய்ப்பகங்களை ஏற்படுத்துதல்.
குறுகிய காலவாழிமுறைகள்: சிறு தொழிற்சாலைகள் நிறுவுதல் அதன் மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்துதல்சாலைப் போக்குவரத்தை மேம்படுத்துதல் அதன் மூலம் உற்பத்தி பொருளை உரிய நேரத்தில் உரிய இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.குடிசை ஒழிப்பு தனியார் கட்டச் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துதல்
ஊரக வேலையின்மைக்கான தீர்வு:வேளாண் சார்ந்த தொழிற்சாலைகலை ஏற்படுத்துதல், சிறந்த நீர்ப்பாசன வசதி நீலம் மேம்பாடு, ஊரக சாலை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துதல் போன்றவை ஊரக வேலையின்மைக்கான தீர்வாகும்.
வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்குவோர்க்கு உரிய ஆதரவு மற்றும் அவர்களின் வெற்றிக்கு சமுதாயம் மற்றும் அரசு உற்றதுணையாக இருக்க வேண்டும்.
நீர்ப்பாசனங்களை முறைப்படுத்துதல் அது தொடர்பான வழிகாட்டுல் வழங்குதல் நீர் மாசை சரிசெய்தல், இயற்கை உரங்களை பயன்படுத்துதல் வேளாண்மை தொழில் செய்வோர்க்கு உரிய வருமானம் கிடைக்கச் செய்தல் என்பது முக்கியமானது ஆகும்.
இந்தியாவில் நிலவும் வேலையின்மையின் தன்மைகள்:
அதிக அளவில் வேளாண்மை தொழில் செய்வோர்க்கு உகந்த வருமானம் கிடைப்பதில்லை. இயற்கை பேரழிவுகள், வறட்சி போன்ற காலகட்டங்களால் விவசாயிகள் தங்கள் முதலீட்டை இழக்கின்றனர்.
அதிக அளவிலான மறைமுக வேளாண்மை
நகரத்தில் நேர்முகமாக வேலையின்மையால் அவதிப்படுதல்
இந்திய அளவில் அதிக வேலைவாய்ப்பின்மை நிலவும் மாநிலமாக சிக்கிம் மற்றும் குறைவான வேலைவாய்ப்பின்மை நிலவும் மாநிலம் குஜராத் மாநிலம் ஆகும்.
1995 முதல் 2000 ஆம் ஆண்டு வரை புதிதாக வேலையின்மைப் பட்டியலில் சேருவோர் எண்ணிக்கை 41 மில்லியன் ஆகும்.
2015-2016 நிதியாண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்பற்றோரின் சதவிகிதம் 5.26 ஆகும்.
நாட்டில் வேலையற்றோர் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் மேற்கு வங்காளம், தமிழ்நாடு மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் உள்ளனர்.
ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா மேற்கு வங்காளம், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மொத்த மக்கள் தொகையின் அளவானது நமது நாட்டின் மக்கள் தொகையில் 48.21% ஆகும்.
பீகார், மகாராஷ்டிரா, இராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களின் மொத்த மக்கல் தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 34%39 ஆகவுள்ளது. இங்கு வேலைப்பற்றோர்களின் அளவு 28% மட்டுமே ஆகும்.
மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், அஸ்ஸாம், ஒடிசா, பஞ்சாப், ஆகிய மாநிலங்களில் மொத்த மக்கள்தொகை நாட்டின் மக்கள் தொகையில் 18.57% ஆகவுள்ளது. இங்கு வேலை வாய்ப்பற்றோர்களின் அளவு 14% ஆகவுள்ளது.
வேலையின்மையின்மையானது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்காளம், மராட்டியம், பீகார் 6 மாநிலங்களிலேயே குவிந்துள்ளது ஆகும்.
மேற்கூறிய 6 மாநிலங்களுடன் உத்திரபிரதேசத்தைச் சேர்க்கும் போது வேலையின்மையின் அளவு 80% ஆகமாறும்.