டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொருளாதா காரணிகளின் குறிப்புகள் !

மூலதனம்:

  • மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள், இயந்திரங்கள் பரும பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.
  • பணவடிவில் அல்லது பண மாற்று பத்திரங்கள் பண மூலதனம் எனப்படும்.
  • கல்வி, பயிற்சி மற்றும் உடல்நலத்திற்காக செய்யப்படும்  முதலீடு மனித மூலதனம் ஆகும். 

உற்பத்தி காரணிகள் சிறப்பு:

  • நிலம் முற்றிலும் இயங்காத் தன்மையுடையது.
  • உழைப்பு குறைவாக இயங்கும் தன்மையுடையது. மனிதன் உழைத்தப் பின் சோர்வடைவான்.
  • மூலதனம் ஆக்கமுடையது அதிகமாக இயங்கும் தன்மையுடையது.
  • தொழிலமைப்பு இடர்பாடுகளையும், நிச்சயமின்மையையும் சந்திக்கிறது.

முதண்மை துறை:

  • முதண்மைத் துறையில் இயற்கைப் பொருட்களை முதன்மைப் பொருட்களாக மாற்றுகின்றன.
  • உணவு உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களைக் கொண்டுள்ளதாலும், இது முதன்மைத் துறையாகிறது.
  • இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விவசாயத் தொழிலைச் சார்ந்துள்ளார்கள்.
  • விவசாயம், மீன்பிடித்தல், வனத்துறை, சுரங்கத்தொழில் மற்றும் கல் உடைத்தல் போன்ற தொழில்கள் முதன்மைத்  துறையை சார்ந்தவையாகும்.
  • முதண்மைத் துறை உற்பத்தியாளர்களின் மூலப் பொருட்களை உபயோகிக்கதக்க பொருட்களாக இரண்டாம் துறை மாற்றுகிறது.
  • முதண்மைத் துறையினை உற்பத்தி எனவும் அழைப்பார்கள் இத்துறையில் மூலப்பொருட்கள் இறுதி நிலைப் பொருளாகவோ அரை இறுதி நிலைப் பொருளாகவோ மாற்றப்படுகிறது.
  • பெரிய அளவிலான மற்றும் சிறிய அளவிலான உற்பத்தி தொழிற்சாலைகளும்  குடிசை தொழில்களும் முதண்மை துறை ஆகும். 

இரண்டாம் துறை:

  • உலோகத் தொழில், உருக்காலைகள், நெசவுத் துறை, கப்பல் கட்டும் தொழில்  பொறியியலைச் சார்ந்த பிற துறைகள் அனைத்தும் இரண்டாம் துறையைச் சார்ந்தவையாகும். 
  •  இரண்டாம் துறை வணிகத் துறை சார்ந்து இருக்கும். 

சார்பு துறை:

  • சமுதாயத்தின் சார்பு தன்மை என்பது சேவை துறையாக இருக்கும். 
  • காப்பீடு, வங்கித் துறை,  உடல் நலம், போக்குவரத்து தொலை தொடர்பு, சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் கேளிக்கை ஆகியவை சார்பு துறை ஆகும். 
  • அமெரிக்காவில் மொத்தம் 80% தொழிலாளர்கள் உள்ளனர். உலக  நாடுகளில் முக்கியமான துறையாக சார்புத் துறை விளங்குகின்றது. 

வேலை பகுப்பு முறை: 

  • வேலை பகுப்பு முறையை அறிமுகப்படுத்துபவர் ஆடம்ஸ்மித் ஆவார். ஒரு உற்பத்தி முறையை வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து அந்த உட்பிரிவுகளை தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவிடம் ஒப்படைத்தலே வேலை பகுப்பு முறை ஆகும். 
  • வேலை பகுப்பு முறையில் எந்த அளவு  நன்மைகள் உள்ளனவோ அந்தளவு தீமைகளும் உள்ளன. 
  • ஆடம்ஸ்மித் வேலை பகுப்பு முறையால் மட்டுமே உற்பத்தியை பெருக்குவதோடு, தகுதியான வேலைக்கு தகுதியான நபர்களை நியமிக்க முடியும் என்றார். 
  • காலமும் மூலப்பொருட்களும் வேலை பகுப்பு முறையில் மட்டுமே திறமையாக பயன்படுத்தப்படுகின்றன என்று விளக்கியுள்ளார். ஆனால் அதில் தீமைகளும் அடங்கியுள்ளன.  ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதால் சுவையற்ற வேலைத்தன்மை ஏற்படுகின்றது. 
  • மனித தன்மையை அழிப்பதோடு கைவிணைப் பொருட்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றது. 
  • ஒரு பொருளை முழுமையாக உற்பத்தி செய்தோம் என்ற மனநிலை தொழிலாளிகளுக்கு இல்லாமல் போகின்றது. 
  • வேலையில் குறுகிய பயிற்சி பெறுவதால் வேறு வேலை வாய்ப்பை தேடுவதற்கான சூழ்நிலைகள் குறைகின்றன.

பணம் : 

  • பணம் மற்றும் பணத்தின் தேவையை சந்திக்கும் என்பது இலத்தீன் மொழிச் சொல்லாகும்.
  • மானட்டா என்பது ரோமானிய பெண் கடவுள்   ஜினோட்டாவின் மறுபெயராகும்.
  • பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையில் வணிகம் நடைபெற்றது. 
  • பண்டத்தை இடையீட்டு பொருளாக பயன்படுத்தி  பண்டமாற்று கண்டுபிடிக்கப்பட்டது. 
  • பணத்தின் மதிப்பீடு என்பது மக்களின் நுகர்வு திறனை அடிப்படையாக கொண்டது. 
  • நுகர்வுத் திறன் என்பது பொருளின் விலையைச் சார்ந்துள்ளது.  

வினாக்கள்:


1 பணம் எந்த நாட்டு கடவுளின் பெயர் ஆகும்?

2 பணத்தின் மதிப்பீடு என்பது யாது?

3 வேலை வகுப்பு முறை என்றால் என்ன?

4 சமுதாயத்தின்  சார்பு தன்மை உடையது எது?

5 பொருளியலில் முதண்மை துறை என்றால் என்ன?

6 இயற்கை பொருட்களை பயன்படுத்தும் துறையின் பெயர் என்ன?

7 பரும பொருட்கள் என்றால் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *