டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக பொருளாதாரத்தில் மனித தேவைகளின் குறிப்புகள்!
அடிப்படை தேவைகள்:
அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடத் தேவைகள் பொருளாதாரம் சேர்ந்தவையாகும்.ஒரு மனிதனுக்கு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலாத நிலைமை வறுமை எனப்படும்.தனிமனித தேவைகளை மட்டும் கணக்கில் கொண்டு இந்தியாவில் வறுமை கணக்கிடப்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் தனிமனித தேவையோடு அடிப்படை சமுகத் தேவைகளும் வறுமையைத் தீர்மானிக்கும்.
வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகள்:
வாழ்வதற்கு தேவையான குறைந்த பட்ச வசதிகளான உணவு, உடை இருப்பிடம் கூட தனிமனிதர்க்கு முழுமையாக கிடைக்காத நிலை இருக்கும். அதனை முழுவறுமை எனபார்கள்.
முழுவறுமை வளர்ச்சி குறைந்த நாடுகளில் காணப்படுகிறது. ஒருவரின் வருவாய் நுகர்வுச் செலவுகள் மிகவும் குறைந்து வாழ்தலுக்கு தேவையான அடிப்படை செலவுகளை கூட அவரால் செய்ய இயலாது.
வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள்:
பருவ மழை பொய்பதால் உழவர்களிடையே தற்காலிக வறுமை நிலை ஏற்படுகிறது. நீண்ட காலமாக நீடித்தால் அது முற்றிய வறுமை நிலை எனப்படும். முற்றிய வறுமைநிலை அமைப்பு சார்ந்த வறுமை என்று அழைக்கப்படும்.
ஏழ்மைக்கான இந்திய திட்டக்குழு :
இந்திய அரசின் திட்டக்குழு வறுமைக் கோட்டை ஊட்டச் சத்தின் அடிப்படை வரையறுத்துள்ளது. நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு 2100 கலோரிகளாகவும் கிராமப்புறங்களில் 2400 கலோரிகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜவஹர் கிராம வேலைவாய்ப்புத் திட்டம்:
1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்க்கான செலவை மத்திய மற்றும் மாநில அரசுகள் 75:25 என்ற முறையில் பிரித்துக் கொண்டது.
நாட்டு சமூக உதவித் திட்டம்:
1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. மைய அரசு மட்டுமே இத்திட்டத்தினை ஏற்று நடத்துகிறது. இத்திட்டத்தின் மூலமாக ஏழைக் குடும்பத்தினர் வயது முதிர்ந்தோர், வறுமானம் ஈட்டும் குடும்பத் தலைவரை இழந்த குடும்பத்தினர் மற்றும் மகப்பேறு கால உதவி பெறுவோர் பயனடைவோர்.
வேலை வாய்ப்பு உறுதி திட்டம்:
1993 அக்டோபர் முதல் நடைமுறைக்கு வேலைவாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. பழங்குடியினர் வாழக்கூடிய பாலைவனங்கள். பழங்குடியிருப்புகள் மற்றும் மலைப் பகுதிகளாகிய 1778க்கு பிற்ப்படுத்தப் பட்ட தொகுப்புகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின் 5488 கிராமங்களில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.
பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு திட்டம்:
பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் 2000-2001 நிதிநிலை அறிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. சுகாதாரம், அடிப்படைக் கல்வி, குடிநீர், வீட்டுவசதி மற்றும் கிராமப்புற சாலைகள் அமைத்தல் ஆகியவற்றிற்காக ரூபாய் 5000 கோடி ஒதுக்கப்பட்டு மக்கள் பயனடைந்தனர்.
கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம்:
கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 1976-1977 மத்திய நிதிநிலை அறிக்கையின் போது முன்மொழியபட்டு 1978-1979 இல் மாற்றியமைக்கப்பட்டது. 1980 அக்டோபர் 2, முதல் நாட்டின் அனைத்து தொகுப்புகளும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டது. சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் மட்டுமல்லாமல் கிராம உழைப்பாளர்கள் அனைவருக்குமான நலன்களை இத்திட்டம் உள்ளடக்கியது.
வேலைக்கு உணவுத்திட்டம்:
வேலைக்கு உணவுத்திட்டம் 2001 பிப்ரவரி 2001இல் நடைமுறைப்படுத்தப் பட்டது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட குஜராத், சண்டிகார், இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா, இராஜஸ்தான், உத்திரகாண்ட் ஆகிய 8 மாநிலங்களில் வேலைவாய்ப்பின் மூலம் உணவு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. மேலும் இத்திட்டத்தின்படி மாநில அரசுகள் தேவைக்கான கூலியின் ஒரு பகுதியை தானியமாகவும் மீதியை பணமாகவும் வழங்குகின்றன. கூலியாக ஐந்து கிலோ தானியம் வழங்கப்படுகின்றது.கல்வி உதவி திட்டம் மூலமாக வறுமைக் கோட்டிற்குக் கிழே வாழும் பெற்றோர்களின் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் குழந்தைகளுக்கு உதவித் தொகை மாதம் ரூபாய் 100 வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
வறுமை ஒழிக்கும் நடவடிக்கை:
பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.இன்றளவும் வறுமையை ஒழிக்க முடியாததற்குக் காரணம் இங்கு நிலவி வரும் ஊழலும் லஞ்சம் முறையே காரணங்களாகும்.
வினாக்கள்:
1 வறுமை ஒழிப்பு நடவடிக்கை என்றால் என்ன?
2 கல்வி உதவித் திட்டம் என்றால் என்னா?
3 கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் என்றால் என்ன?
4 பிராதான் மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது.
5 சமூக உதவித் திட்டம் என்றால் என்ன?