டிஎன்பிஎஸ்சி

குரூப் 1 தேர்வுக்கான பொருளாதார ஹைலைட்ஸ் 4!

சமுதாயம் வளர்ச்சி திட்டத்தின் மூலம் வேளாண்மை மாற்றம் பெற்று வருகின்றது.

மத்திய அரசு 64 ஆண்டுகளாக செயல்படுத்தி வந்த திட்டக் குழுவிற்கு நிதி அயோக் என்ற பெயர் மாற்றம் செய்துள்ளது.

தேசிய மேம்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து தொலைநோக்கு திட்டத்தை  உருவாக்குதல்.
கூட்டாட்சி தத்துவத்தை ஊக்குவித்தல்
தொழில் மேம்பாட்டு அதிக கவனம் செலுத்துதல் இவற்றின் முக்கிய நோக்கம் ஆகும்.
இதன் தலைவராக பிரதமர் இருப்பார். நிதி அயோக் ஆட்சி மன்றம் சபை கொண்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் கொண்ட அமைப்பாக உள்ளது.  

 நிதி அயோக்கின் பிராந்திய சபை அனைத்து  மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களை கொண்ட சபையாகும் இந்த சபையானது தேவைப்படும் நேரத்தில் அல்லது குறிப்பிட்ட சில பிரச்சினைக்கு மட்டுமே கூட்டப்படும்.

குறிப்பிட்ட துறையை சார்ந்தவர்கள் மட்டுமே சிறப்பு உறுப்பினர்களாக இருப்பார்கள்.
நிறுவனத்திலிருந்து செயல்பாட்டுக்காக அயோக்கின் தலைவர் துணை தலைவர்கள் போன்றவர்கள் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள்.

நிதி அயோக்கின் நியமனங்கள்

நிதி அயோக் முதல் தலைவர் சேர்மன் என அழைக்கப்படுவார். சிந்து ஸ்ரீ குல்லர் நிதி அயோக்கின் முதல் தலைவராக பணியாற்றியுள்ளார்.

நிதி அயோக்கின் முதல் துணை தலைவராக அரவிந்த் பனகாரியா செயல்பட்டார்.

பணிகள்:

அரசாங்கத்தின் சிந்தனை களஞ்சியமாக செயல்படும் கொள்கைகளை வகுத்து அதன் சிறப்பான செயல்பாட்டிற்கு காரணியாக செயல்படும்.

மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளை வடிவமைக்க அறிவு சார்ந்த தொழில்நுட்ப அறிவுரைகளையும் பரிந்துரை செய்யும்.

புதிய கொள்கை முடிவு கொண்டுவருவது உள்நாட்டுப் பொருளாதாரம் வணிகம் தொடர்பாக திட்டங்கள் அமைத்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்சிமுறைகளை செயல்படுத்துதல், சவாலான திட்டங்களுக்கு தீர்வு தருவது இதன் நோக்கமாகும்.

திட்டக்குழு:

திட்டக்குழு மார்ச் 15, 1950 இல் ஜவஹர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது இது மத்திய கேபினட் சபையும் தீர்மானத்தால் உருவானது.

திட்ட குழுவானது அரசியலமைப்பின் கீழ் இல்லை மேலும் இது சட்டபூர்வமான அமைப்பும் இல்லை. ஆலோசனைகளை மட்டும் வழங்கும் ஆனது பிரதமரை தலைவராக கொண்டு இயங்கும்.

குழுவின் துணைத்தலைவர் அந்தஸ்தை பெறுகின்றார். பிரதமரால் நியமிக்கப்படும் துணை தலைவரையும் மற்ற முழுநேர உறுப்பினர்கள் மற்றும் பகுதி நேர உறுப்பினர்கள் மற்றும் செயலகம்  உள்ளடக்கி செயல்படுகின்றது.

பதவிக் காலம்

குழுவின் பதவிக் காலம் ஆனது நிர்ணயிக்கப்படாத ஒன்றாக உள்ளது. உறுப்பினர்கள் அரசின் விருப்பப்படி அரசினால் நியமிக்கப்படுகின்றார்கள். மேலும் தேவைப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் திட்டக் குழுவின் விருப்பத்தை பொறுத்து செயல்படும்.

திட்டக் குழுவின் துணைத்தலைவர் கேபினட் அந்தஸ்து பெற்றவராக செயல்படுவார்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்ற மூலதனம், நாட்டினுடைய மனிதவளம் ஆகிவற்றை மதிப்பிடும்.

தேவைக்கேற்பவும் நாட்டில் உள்ள வளங்களை சமமாக பயன்படுத்தி திட்டங்களை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.

திட்டங்கள் பல உருவாக்கப்பட்டு அவற்றின் முக்கியத்துவம் கொண்டு வளங்களை ஒதுக்கீடு செய்கின்றது.

மேலும் வகுக்கப்பட்ட திட்டங்கள் பல்வேறு கால கட்டங்களுக்கு ஏற்ப எவ்வாறு செயல்படுகின்றது என்பதை வளங்கள் மதிப்பிட்டு மேலும் அத்திட்டங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து, சவால்கள் ஏதும் ஏற்பட்டால் சரியான தீர்வினை வழங்கி சிறப்பாக செயல்படுவது இதன் நோக்கமாகும்.

மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு திட்டங்களிலும் குறிப்பிட்ட விஷயங்களில் ஆலோசனைகள் வழங்கி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வது இதன் நோக்கமாகும்.

ஆகஸ்ட் 152014ஆம் நாள் சுதந்திர தினத்தன்று திட்டக் குழு கலைக்கப்பட்டு நிதி அயோக் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *