நொருங்க தின்றால் 100 வயது.!
நொறுங்கத் தின்றால் 100 வயது வாழலாம். அப்படினு ஒரு பழமொழி என்னடா, இது நொறுக்குத்தீனி நிறைய சாப்பிட சொல்றாங்களே அப்படி நினைக்காதீங்க, நொறுக்குத்தீனி இல்ல நொறுக்கி சாப்பிடுவது ஆகும். அதாவது நாம் உண்ணும் உணவை ஐந்து கைவிரல்களால் நன்கு பிசைந்து மாவு போல் பிசைந்து அதனை வாயில் மென்று விளங்க வேண்டும். பிசைந்து சாப்பிட கூச்சப்பட வேண்டியது இல்லை.
ஐந்து விரல்கள் பஞ்சபூதங்களின் ஆற்றல் குறிப்பிடும் இது பஞ்சபூதங்களில் பூதங்களின் ஆற்றலை நமக்கு தரும். உணவை நன்கு பிசைந்து ஏழு முறை நன்கு மென்று விளங்க வேண்டும். இதன் மூலம் உணவானது உடனடியாக சத்தாக மாறும். இது ரத்தமாக உடலுக்கு தேவைப்படும் ஆற்றல்களாக உடனடியாக உடலின் எல்லா பகுதிக்கும் சென்று சேரும்.
தேவையற்ற கழிவுகள் மட்டுமே வெளியேறும். ஆகையால் உணவை முறையாக மென்று சாப்பிடுவது என்பதை நமது முன்னோர்கள் அவர்களின் வாழ்வின் படி உடல்கூறு சாஸ்திரத்தில் இதனை தெரிவித்துள்ளனர்.
உணவை மென்று சாப்பிடுவது நல்லது. இவற்றில் நான்கு வகைகள் உள்ளன மென்று விழுங்குவது மற்றும் நக்கி சாப்பிடுவது சப்பி சாப்பிடுவது உறிஞ்சி சாப்பிடுவது இதுபோன்ற நான்கு முறைகளும் உடலுக்கு உடனடி ஆற்றல் தருபவை ஆகும். நாம் உண்ணும் உணவு முறைகளுக்கு ஏற்ப இவற்றினை பின்பற்றவேண்டும். தண்ணீர் குடிக்கும் போது பாட்டிலை வாயில் வைத்து மடமடவென குடிக்கக்கூடாது.
வாயில் வைத்து ஒரு சிப் தண்ணீர் வைத்து அதனை மூன்று முறை விட வேண்டும் 75% ஒரு முறை 50% இரண்டாம் முறை 25% மூன்றாம் முறை இப்படி தண்ணீர் குடித்து வந்தால் உடலில் சென்று அதை உடனடியாக இரத்தமாக மாறும் உடலுக்கு தேவைப்படும் ஆற்றல் உடனடியாக கிடைக்கும். உடலில் எந்தவித நோயும் அண்டாது சத்துக்கள் பெருகும். இதனை முன்னோர்கள் சாஸ்திரத்தின் முக்கியம் வழிமுறைகளாகும். இப்படி சாப்பிட்டு வருவதால் உடலில் நோய் அண்டாது. நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும். உடல் வளம் பெறும் சாப்பிடும் உணவிற்கு மென்றும் ஒரு அர்த்தம் இருக்கும்.
நாம் இன்று ஆன்லைன் வாசிகள் ஆகிவிட்டோம் பீட்சா பர்கர் என்று சுத்தி திரிய ஆரம்பித்து விட்டோம். அந்த உணவுகளில் நமது உடலின் போக்கை மாற்றுகின்றன. நமது உடலுக்கு தேவையான இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, காரம் போன்ற சுவைகள் அனைத்தும் முறையாக சரியாக கிடைக்க வேண்டும். இது போன்று முறையாக சரியாக பின்பற்றி வந்தவர்கள் நமது முன்னோர்கள் நாகரிக மாற்றம் என்ற பெயரில் நரக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நகரத்து வாசிகள் நாம்.
இனிமேலாவது நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம். உணவை மருந்தாக உண்போம் உடலை வலுப்படுத்தும்.