மூளை சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிடுங்க..!!
உடலுக்கு தேவையில்லாத கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அளித்து உடலுக்கு சக்தி அளிப்பதில் முந்திரி முக்கிய பங்காற்றுகிறது. முந்திரி என்றாலே, பொங்கல் பாயாசத்திற்கு பயன்படுத்தும் ஒரு பொருளாக மட்டுமே நினைக்கிறோம் பலரும். ஆனால் இதில் இதனை சத்துகள் இருப்பதை அறிந்தால், அடிக்கடி உபயோகபடுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.
நல்ல கொழுப்பை தரும்
பாதாம், முந்திரி இரண்டுமே உடலுக்கு தீமை தரும் கொழுப்பை அளித்து நல்ல கொழுப்பை தரும். மலச்சிக்கல், சுவாச கோளாறு கள், சர்க்கரை நோய், சரும கோளாறுகள், சோரியாசிஸ், கேச பிரச்னை, பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மை குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சனையை களைவதில் இந்த பருப்புகள் துணை புரியும்.
பசியை கட்டுப்படுத்த
முந்திரியை 100 கிராம் அளவு எடுத்தால் அதில் .150 மிலி., சத்துக்கள் வைட்டமின் பி 1 , பி 6, ஆ 6, அதிகளவில் உள்ளன. பைரிடாக்சின் முப்பத்திஐந்து சதவீதம் உள்ளது. இந்த வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், கொழுப்பு, செல்களில் புரதம் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. ஒரு பிடி முந்திரி சாப்பிட பசியை நீண்ட நேரம் கட்டுப்படுத்த முடியும். முந்திரி கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து கொடுத்து பழக்க வேண்டும். இதிலுள்ள காப்பர், துத்தநாகம், மாங்கனீசு மற்றும் சைட்டோகுரோம் சி ஆக்ஸிடேஸ், சூப்பர் ஆக்சைடு டிஸ்முடெஸ் நொதிகளுக்கு இணை காரணியாக உள்ளன. காப்பரில் உள்ள தைரோசினேஸ் ஆனது, தைரோசினை மெலனின் ஆக மாற்றுகிறது. மெலனின் முடி மற்றும் தோலுக்கு நிறம் கொடுக்கும் நிறமியாக உள்ளது. இதில் செரிமானம், நியூக்ளிக் அமிலம் சிதைவடைதலை ஒழுங்குபடுத்துகிறது.
சுறுசுறுப்பு
ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இத்தகைய கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நன்மை தரும் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். நார்சத்து, கனிம தாதுக்கள் இருப்பதால் புற்று நோயை வராமல் தடுக்கும் தாவர வேதியங்கள் அதிகளவில் உள்ளன. இதை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்து குழந்தைகளை படைப்பாளியாக சுறுசுறுப்புடன் வைத்திருங்கள்.
Pingback: சுகமாக வாழ… இனியெல்லாம் சுகமே..!! | SlateKuchi