உடல் எடையை எளிதில் குறைக்க இந்த தோசை செய்ங்க
உடலுக்கு நீர்ச்சத்து தேவைப்படுகிறது. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடல் எடையை குறைக்க வேண்டும். உடலுக்குத் தேவையான நீர் எடுத்துக் கொள்வது அவசியம். மார்கழி மாதத்தில் குளிர்காலம் என்பதால் நீர் அதிகம் குடிக்க தோன்றாது. நீர் அதிகம் குடிக்க முடியாமல் இருப்பவர்கள் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் நீர் குடிக்காவிட்டால் பேலன்ஸ் செய்யும். சுரைக்காய் தோசை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. மேலும் வெயிட் லாஸ் செய்ய விரும்பறவங்க மிஸ் பண்ணாம பாருங்க.
- உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடல் எடையை குறைக்க வேண்டும்.
- வெயிட் லாஸ் செய்ய விரும்பறவங்க
- மிஸ் பண்ணாம பாருங்க.
சுரைக்காய் தோசை
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு 100 கிராம், ரவை 50 கிராம், கடலை மாவு 25 கிராம், தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன், பெருங்காயம் சிறிது, உப்பு தேவையான அளவு. எண்ணெய் தேவையான அளவு.
அரைக்க சுரைக்காய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, சீரகம், சிறிது தண்ணீர்.
செய்முறை விளக்கம்
தோல் சீவி உள்ளே உள்ள பஞ்சு விதைகளை நீக்கி விட்டு நறுக்கிய சுரைக்காய் அரை கப். சிறிய வெங்காயம் 7, பூண்டு 4, இஞ்சி சிறிய துண்டு, பச்சை மிளகாய் 2, மல்லித்தழை தேவைக்கு ஏற்ப. சீரகம் கால் ஸ்பூன். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக ஊற்றக்கூடாது. அரைக்க 2, 3 ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டாலே போதுமானது. அரைக்க அரைக்க தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவையை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இன்னொரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, கடலை மாவு, தேங்காய் துருவல், பெருங்காயம் சிறிது, உப்பு போட்டு கைகளால் கலந்து விட்டு தோசை மாவு பதத்திற்கு கலக்கி விடவும். இந்த மாவில் மிக்ஸியில் அரைத்த சுரைக்காய் கலவையையும் சேர்த்து கலந்து தோசை பதத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும். மாவு தயார்.
தோசைக்கல்லை சூடு செய்து இந்த மாவை மெல்லிய முறுவல் ஊற்றி தோசை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறலாம். தொடர்ந்து இந்த தோசையை ஒரு வாரம் சாப்பிட நல்ல ரிசல்ட் கிடைக்கும். இந்த தோசையுடன் உங்களுக்கு பிடித்த சட்னியை செய்து சாப்பிடலாம்.