கருப்பட்டியை தடையின்றி சாப்பிடுங்க..!!
நாம நல்லா இருந்தால் தானே நம் குடும்பத்தை நன்றாக கவனித்து கொள்ள முடியும். அதற்கு நீங்கள் தானே முன் உதாரணமாகவும் இருக்க வேண்டும். நீங்கள் சமைத்து கொடுக்கும் உணவில் இருக்கிறது உங்கள் பாசமும், நேசமும். அதுவும் நல்லதாக தேர்ந்து எடுத்து செய்வதில் தனி சுகம் தானே.
கருப்பட்டியில் சுண்ணாம்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. இதை வயது வரம்பு இன்றியும், நோய்க்கு தடையின்றியும் யாவரும் சாப்பிடலாம். உணவின் மருந்தாகும் இதன் பயன்கள் என்னிலடங்காதவை. சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம். பருவம் அடைந்த பெண்களுக்கு உளுந்து, கருப்பட்டி சேர்த்து களி செய்து கொடுத்தால் இடுப்பு வலுபெறும்.
கருப்பைக்கு / சர்க்கரை வியாதி
சீரகத்தை வறுத்து பொடி செய்து, கருப்பட்டி சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும். ஓமத்தை வறுத்து பொடி செய்து, கருப்பட்டி யுடன் சேர்த்து சாப்பிட வாய்வு தொல்லை நீங்கும். நாள்பட்ட சளி, இருமலுக்கு குப்பைமேனி இலையை வதக்கி கருப்பட்டி யுடன் சேர்த்து சாப்பிடலாம். கருப்பட்டி காபி குடிக்க சர்க்கரை அளவு கட்டுபடும். சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டி காபி குடிக்கலாம். கருப்பைக்கு நல்லது இந்த கருப்பட்டி.
சர்க்கரை வியாதி, ஈரல் நோய், மனசோர்வு , சிறுநீரக கற்கள், சிறுநீர் கோளாறு, உடல் பருமன், இதய நோய்கள், கொலஸ்ட்ரால், பல்வேறு வகையான புற்று நோய்கள், போன்ற பல வியாதிகளுக்கு இந்த வெள்ளை சர்க்கரை நம்மை கூடி செல்லும். சர்க்கரை உற்பத்தியின் போது, கலக்கப்பட்ட பல்வேறு கெமிக்கல் விஷங்கள், உடலின் இயல்பு சமநிலையை பாதித்து, பெருவியாதிக்கு அடித்தளமிடுகிறது.
ஹார்மோன் சுரப்பின் சமநிலை தடுமாறுவதால் உடலின் மொத்த இயக்கத்திலும் தடுமாற்றம் ஏற்படும். கேன்சர், கருப்பை கோளாறு, குழந்தையின்மை, கிட்னி, கணையம் என்று உடலின் முக்கிய உறுப்புக்கள் அனைத்தும் பாதிக்க செய்கிறது. இதனால் உடல் பருமனும், இதய நோய்களின் தாக்கமும் கூடிக்கொண்டே செல்கிறது.
கருப்பட்டி
கருப்பட்டியில் உரமோ, பூச்சி மருந்தோ அடிக்கப்படு வதில்லை. விச கெமிக்கல் சேர்க்கவில்லை, ஈரலையோ, உடலின் ஹார்மோன் அமைப்போ பாதிப்பதில்லை, எந்த நோய்யும் வர வழைப்பது இல்லை. மாறாக வரும் நோயை விரட்டி, வரும் நோயை வரவிடாமல் தடுக்கும். பெண்கள் பிரசவத்திற்கு பிறகு சுக்கு கருப்பட்டி, மிளகு சேர்த்து சாப்பிடுவார்கள், எள்ளு லட்டு செய்து சாப்பிடுவார்கள். இதனால் கருப்பையில் உள்ள மிச்ச கழிவை வெளியேற்றும்.
வெள்ளை சர்க்கரை
வெள்ளை சர்க்கரை சாப்பிட ஈரலுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டு, ஈரலில் கொழுப்பு தேங்கி, அது இன்சுலின் சுரைப்பாய் பாதித்து, சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். ப்ரக்டோஸ், இன்சுலின் சுரப்பை மட்டுமல்ல, மூளைக்கு உணவு தேவை என்ற தவறான தகவலை கொடுத்து, ஹார்மோன் சுரைப்பை தடை செய்து அதிகளவு உணவை எடுக்க செய்கிறது.
பனங்கற்கண்டு, கருப்பட்டியில் மினரல், வைட்டமின் அதிகம் உள்ளது. இயற்கையாக உடலை குளிர்ச்சி ஆக்கி, சர்க்கரை உடலில் கலக்கும் வேகத்தின் குறியீடான கிளைசீமி இன்டெக்ஸ் உள்ளதால் உடலில் வர கூடிய பல நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.