முக்கனிகளில் ஒன்றான இதை சாப்பிட..!!
முக்கனிகளில் முதல் இடத்தைப் பெற்ற மாம்பழத்திற்கு அடுத்து பலாப்பழம் இந்த பழத்தின் சுவையும், மணமும் அதிகம். அதிகம் சாப்பிட்டால் அஜீரணம், வயிற்று வலி முதலிய பிரச்சனைகள் தோன்றும். தேன் கலந்து சாப்பிடுவது ருசியை பெருக்குவது மட்டுமல்லாமல், ஜீரணத்துக்கும் உதவும்.

இந்த பழம், தேங்காய் துருவலும் சேர்த்து சாப்பிடுவது பழக்கத்தில் உள்ளது. அதிகமாக இருக்கும் வயிற்றிலுள்ள தொல்லைக்கு பலாபழம் நல்ல நிவாரணமாக இருக்கும். பழம் சாப்பிடும் போது வேறு எந்த எந்த ஒரு பழத்தையும் இதனுடன் சேர்த்து சாப்பிடாமல் தனித்து சாப்பிடுவது மிக அவசியமாகும்.
கேரள நாட்டு விருந்துகளில் பலாச்சுளை பாயாசம் விரும்பி சாப்பிடக் கூடிய ஒன்றாகும். பலாப்பழத்தை பயன்படுத்தி விரும்பி சாப்பிடக் கூடிய பல பானங்களை தயாரித்து வருகின்றன.
வயிற்றுப் போக்கு வயிற்றுக் கடுப்பு இவற்றை கசாயமாக செய்து சிறிதளவு கொடுக்க வயிற்றுப் போக்கு வயிற்றுக் கடுப்பு முதலிய நோய்கள் குணமாகும்.
ரத்த கட்டிகள் வீக்கங்கள் இவற்றிக்கு பலா மரத்தின் சிறுவேரை பிழிந்து அதன் சாற்றை தடவி வர குணம் கிடைக்கும். இரண்டொரு துளிகள் மூக்கில் விட்டால் நீண்ட தலை வலிக்கு கூட நிவாரணம் கிடைக்கும்.

பலா மரத்தின் பயன்கள் பல வகைகள், சட்டங்கள் பார்வைக்கு அழகாக மஞ்சள் நிறத்துடன் இருப்பதுடன் மலை முதலிய வெயில் காலங்களிலும் பாதிக்கப்படாமல் நெடு நாட்களுக்கு உபயோகிக்க தகுதி உடையது.
இந்த பலாப்பழம் முக்கனிகளில் மாம்பழம் வாழைப்பழம் ஆகியவற்றை காட்டிலும் மணமும் ருசியும் பலாப்பழத்தில் இருந்தாலும் உடலுக்கு ஏற்ற மருத்துவ பயன் இந்த பழத்தில் குறைவு தான்.