உடல் பளபளப்பாக பாதாம் சாப்பிடுங்க..!!
சருமம் பளபளக்கும்
ஓடி ஓடி அலைந்து வேலை பார்த்து உடல் சோர்வு ஏற்படும். உடலில் சோர்வு இல்லாமல் ஆரோக்யமாக, சுறுசுறுப்பாக செயல்பட பாதாம் தினமும் மூன்று வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். சருமம் பளபளக்கும், அழகு மிளிரும். பாதாமில் தாது சத்துகளும், வைட்டமின்களும் மலிந்து காணப்படுவதால் உடல் செழிக்க செய்யும் ஒரு ஆரோக்யமான பருப்பு என்றே சொல்லலாம்.
நினைவாற்றல்
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதசத்து கிடைக்கும். ஜீரணசக்தி, நினைவாற்றல் அதிகரிக்கும் சக்தியும் இதில் உள்ளன. பாதாமில் நல்ல கொழுப்புகள் உள்ளன. உடலில் நல்ல கொழுப்புகள் தேவைப்படும். கெட்ட கொழுப்பு அதிகமானால் உடலில் சிக்கல் ஏற்படும். கெட்ட கொழுப்பை குறைத்து, ரத்தத்திற்கு நல்லது செய்யும், கொழுப்பை அதிகரிக்க தினமும் ஐந்து பாதாம் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வர அவர்கள் நினைவாற்றல் அதிகரிக்கும்.
ஆபத்தான நோய்கள்
தினமும் இரவு பாதாம் ஊற வைத்து மறுநாள் காலை இதன் தோலை நீக்கி விட்டு சாப்பிட்டு வரவும், இதனுடன் நிலக்கடலை சேர்த்து சாப்பிட ஆயுள் கூடும். ஆபத்தான நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம். பக்கவாதம், பசியின்மை, பலவீனம், எதிர்ப்பு சக்தி போன்ற ஆரோக்ய பிரச்னையில் இருந்து விடுபட முடியும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
புத்திகூர்மை
பிள்ளைகளுக்கு சிறுவயதில் இருந்தே பாதாம் குடுத்து வர மூளை சுறுசுறுப்பாக இருக்கும். வயோதிக காலத்தில் ஏற்படும் நியாபக மறதியை போக்கும். பி வைட்டமின், அமினோ அமிலம் மூளை செயல் திறனை அதிகரிக்க செய்யும். புத்திகூர்மையாகும், நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி அக்ஸிடண்ட்கள் புற்று நோய் வரவிடாமல் தடுப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதயத்துக்கு சக்தி
எடை குறைக்க விரும்புபவர்கள் வரம் இரண்டு முறை ஐந்து, ஐந்து பாதாம் சாப்பிட எடை குறைப்புக்கு முப்பத்தி இந்து சதவீதம் உதவும். இதய நோய் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை பாதாம் சாப்பிட ஐம்பது சதவீதம் மாரடைப்பு அபாயம் குறையும். ஐம்பது கிராம் பாதாமில் இருபத்தி ஐந்து சதவீத கொழுப்பு உள்ளது. பாதாம் தோலில் உள்ள வைட்டமின் இ சத்தானது இதயத்துக்கு சக்தி கொடுக்கும். இதய நோயை கட்டுப்படுத்தும்.
மேலும் வாத பிரச்சனையை போக்கும். புரதமும், வைட்டமின் சத்துள்ள பாதாமை, டயட்டில் இருப்பவர்கள், கொழுப்பை தவிர்ப்பவர்கள், எண்ணெய் விந்துக்கள் வேண்டாம் என்று நினைப்பவர்கள், இந்த பாதாமை சாப்பிடலாம். உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.