மால்போவா ராஜஸ்தான் ஃபேமஸ் ரெசிபி இனி உங்கள் வீட்டில்
மால்புவா இந்த ரெசிப்பி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பிரபலமாக இருக்கின்ற ஒன்று. மைதா மாவினால் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் எல்லா விசேஷ நாட்களிலும் இனிப்பு பலகாரம் மற்றும் இனிப்பு சிற்றுண்டி ஆக இது வழங்கப்படுவது.
மால்புவா ஒரு ருசியான இனிப்பு ரெசிபியை மட்டுமில்லாமல் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு ரெசிபி. இந்த ரெசிபியின் பெயர் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள். சர்க்கரை பயன்படுத்தி செய்யும் மால்புவா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
மால்புவா ரெசிபி
தேவையான பொருட்கள் : 100 கிராம் கோயா, 100 மில்லி பால், ஒரு கப் மைதா மாவு, மூன்று ஸ்பூன் சீரகம், சர்க்கரை 2 கப்பு, தண்ணீர் ஒரு கப், நெய் 2 ஸ்பூன், நறுக்கிய பாதாம், பொடி செய்யப்பட்ட ஏலக்காய், அலங்கரிப்பதற்கு தயாரித்து வைக்கவும்.
செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் கோயா மற்றும் பால் சேர்த்து நன்றாக கலக்கி வையுங்கள். இரண்டும் நன்றாக கலந்தது இதனுடன் மைதாவை சேர்த்து கலக்கி விடவும். சீரகம் சேர்த்து மாவை நன்கு பதத்திற்கு வரும்வரை கலக்கவும். நமக்குத் தேவையான அளவு வேண்டிய வடிவத்தில் தயார் செய்து எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் தண்ணீர் விட்டு கொதிக்க ஆரம்பிக்கும் போது சர்க்கரையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பாகு தயாராக இருக்கும் போது ஏலக்காயை சேர்த்து இறக்கி வைக்கவும். அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு தனி பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடானதும் கலந்து வைத்துள்ள மாவு கலவையை எடுத்து கொஞ்சமாக ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்து பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும். சமைத்த மல்கோவாவை சர்க்கரைப் பாகில் நனைத்து எடுத்து, விரும்பினால் அரை மணி நேரம் சர்க்கரைப் பாகில் ஊறவைத்து வெளியே எடுக்கவும்.
இதன்மேல் ஏலக்காய் சிட்டிகை அளவு, துருவிய பாதாம் சேர்த்து அலங்கரித்து பரிமாற வேண்டும். சுவையான மால்புவா ரெசிபி தயார்.